கால் இறுதியில் நாளை மோதல்: போர்ச்சுக்கல், இங்கிலாந்து அணியை சமாளிக்குமா?

Read Time:4 Minute, 10 Second

Football.England.jpgஉலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி யுள்ளது. கடந்த 9-ந் தேதி தொடங்கிய இந்த போட்டியின் கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. முதல் கால் இறுதியில் ஜெர்மனி – அர்ஜென்டினா அணிகளும், 2-வது கால் இறுதியில் இத்தாலி – உக்ரைன்அணிகள் மோதுகின்றன. நாளை 3-வது மற்றும் 4-வது கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. 3-வது கால் இறுதியில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இங்கி லாந்து – போச்சுக்கல் மோதுகின்றன.
இங்கிலாந்து அணி `லீக்’ ஆட்டங்களில் 1-0 என்ற கணக்கில் பராகுவேயையும், 2-0 என்ற கணக்கில் டிரினிடாட்டையும் தோற்கடித்தது. சுவீடனுடன் 2-2 என்ற கணக்கில் `டிரா’ செய்தது. 2-வது சுற்றில் 1-0 என்ற கணக்கில் ஈக்வடாரை தோற்கடித்தது.
போர்ச்சுக்கல் ‘லீக்’ ஆட்டங்களில் அங்கோலா (1-0), ஈரான் (2-0), மெக்சிகோ (2-1) அணிகளையும், 2-வது சுற்றில் ஆலந்தையும் (1-0) தோற்கடித்தது.

வீரர்களின் காயம் மற்றும் சிவப்பு அட்டை காரணமாக போர்ச்சுக்கலுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ஆலந்துக்கு எதிரான ஆட்டத்தில் முன் னணி வீரர்களான டிகோ, கோஸ்டினா ஆகியோர் சிவப்பு அட்டை பெற்றனர். இதனால் நாளைய ஆட்டத்தில் ஆட முடியாது. இதேபோல பல வீரர்கள் மஞ்சள் அட்டை பெற்றுள்ளனர்.

ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிராக போர்ச்சுக்கல் வெற்றி பெற்றால் அந்த ஆட்டத்திலும் பல வீரர்கள் மஞ்சள் அட்டை பெற்றால் பல வீரர்கள் அரை இறுதியில் ஆடும் வாய்ப்பை இழக்கும் நிலை உருவாகும்.

மேலும் முன்னணி வீரர்களாக திகழும் பிகோ மற்றும் கிறிஸ்டியானோ ரோனால்டோ காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். நாளைய கால் இறுதி ஆட்டத்தில் மனிச், பால்ட்டா ஆகியோர் அந்த அணியில் நம்பிக்கை அளிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

1966-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியில் தற்போது லம்பார்டு, ஸ்டீவன் ஜெர்ரார்டு, கேப்டன் பெக்காம், ஜோகோலி, பீட்டர் குரோச் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக ஜொலிக்கிறார்கள். மேலும் அணியின் நம்பிக்கை தூணாக துடிப்புடன் அசுர வேகத்தில் ஆடும் ரூனி உள்ளார்.

போச்சுக்கல் அணியில் முன்னணி வீரர்கள் இல்லாத தவிப்புடன் நாளை களம் இறங்குகிறது. இதை தனக்கு சாதகமாக இங்கிலாந்து அணி பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் அந்த அணி எளிதாக வெற்றியை தனக்காக்கிக் கொள்ளும். போர்ச்சுக்கலுடன் வெற்றி பெறும் பட்சத்தில் இங்கிலாந்து அரை இறுதியில் பிரேசிலுடன் மோத வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து – போர்ச்சுக்கல்லும் உலக கோப்பைகளில் இதுவரை இரண்டு முறை மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி கண்டுள்ளது. கடைசியாக 2004-ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல், இங்கிலாந்தை தோற்கடித்திருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வேலூர் ஜெயிலில் 6-வது நாளாக நளினி-முருகன் உண்ணாவிரதம் நீடிப்பு
Next post பிரான்சுடன் நாளை மோதல்: அரை இறுதியில் பிரேசில் நுழையுமா?