கர்ப்பிணி பெண்கள் மது குடிப்பது குற்றமல்ல: இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு!!

Read Time:2 Minute, 9 Second

37e7cbb9-93fc-4abf-96c7-7e2e14a10aa3_S_secvpf (1)இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் கர்ப்பிணி ஆக இருந்த போது நாள் ஒன்றுக்கு பல பாட்டில்கள் ‘ஓட்கா’ மது அருந்தினார். எப்போதும் போதையில் மூழ்கி திளைத்தார்.

அவருக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக் குழந்தை மூளை வளர்ச்சி இன்றி பிறந்தது. எனவே, அதை தான் வளர்க்காமல் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து விட்டார்.

தற்போது அந்த குழந்தைக்கு 7 வயது ஆகிறது. மூளை வளர்ச்சி இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு வளர்ச்சி இன்றி உள்ளது. இந்த நிலையில் பராமரிப்பு இல்லத்தை சேர்ந்தவர்கள் அக்குழந்தையின் தாய் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில் கர்ப்பிணி ஆக இருந்த போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் தான் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதித்து உடல் நலம்பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, குழந்தையின் மருத்துவ செலவுக்கு நஷ்ட ஈடாக தொகை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில், இங்கிலாந்து சட்டப்படி கருவில் இருக்கும் குழந்தையை ஒரு நபராக கருத முடியாது. எனவே, அவருக்கு எதிராக ஒரு தாய் குற்றம் செய்ததாக கருத முடியாது என தீர்ப்பளித்தது.

அதாவது கர்ப்பிணி ஆக இருக்கும் போது பெண்கள் மது அருந்துவது குற்றமல்ல என தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு கர்ப்பிணி பெண்கள் இது போன்ற குற்றங்கள் செய்வதை அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மற்றொரு கறுப்பின வாலிபர் கொலையில் தீர்ப்பு: அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!!
Next post ரஷ்ய அதிபர் புதின் 10-ம் தேதி இந்தியா வருகை: 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!!