ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1000 புதிய வார்த்தைகள்!!

Read Time:2 Minute, 0 Second

67d57ec7-f0ec-4c39-aee5-c2b5135cc950_S_secvpf150 வருடங்கள் பழமை வாய்ந்தது, உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி நிறுவனம். ஆங்கிலம் பேசும் நல்லுலகத்திற்காக தன்னிடம் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம்.

அதன்படி நடப்புக் காலாண்டுக்கான தர மேம்படுத்தலில் 1000 புதிய வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் இணைத்துள்ளது.

பதின்ம உரையாடல், விளையாட்டு சொல்லியல், மற்றும் வணிக வழக்குமொழி போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த வார்த்தைகளை தங்களது ஆன்லைன் அகராதியில் புதிதாகச் சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அகராதி ஆங்கில வெகுஜன மக்களின் கலாச்சாரத்தைச் சார்ந்த வார்த்தைகளையும், சில விரிவாக்கங்களையும் இணைத்துள்ளது. உதாரணமாக ‘டக் ஃபேஸ்’ என்ற வார்த்தை புகைப்படம் எடுக்கும் போது ஒரு நபரின் உதடுகள் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வார்த்தையாகும்.

வளமான ஆஸ்திரேலிய ஆங்கில வட்டார வழக்குகள் வரை, இந்த அகராதியின் ஆதிக்கம் நீண்டுள்ளது. உதாரணமாக ஷைனி பம்(அலுவலக பணியாள்), ஸ்டிக்கர் லிக்கர்(வாகன நிறுத்த அபராதத்தொகை செலுத்துபவர்) போன்ற மக்களிடையே சகஜமாகப் புழங்கும் சொற்களும் இணைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினிமா தயாரிப்பாளர் கொலையில் சிக்கிய நடிகை ஐகோர்ட்டில் மனு: நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவு!!
Next post அமெரிக்க புதிய ராணுவ மந்திரி ஆஷ்டன் கார்ட்டர்: ஒபாமா அறிவிப்பு!!