பெங்களூரு பள்ளி வளாகத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அலுவலக உதவியாளர் கைது!!

Read Time:2 Minute, 25 Second

34e159b8-0531-4133-908b-e301eb25d067_S_secvpfபெங்களூரு ஓல்டு மெட்ராஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியரின் 3 வயது சிறுமி ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் (‘‘பிரீ கே.ஜி’’) படித்து வருகிறாள்.

கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதி காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற சிறுமி ஷாலினி மதியம் வீடு திரும்பினாள். அப்போது அவளது முகத்தில் வழக்கமாக காணப்படும் உற்சாகம் காணப்படவில்லை. மேலும் அவளுடைய நடவடிக்கையிலும் மாற்றம் தெரிந்தது.

அதன் பின்னர் சிறுமி ஷாலினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து ஷாலினியின் தாயார் சிறுமியிடம் பள்ளியில் என்ன நடந்தது என விசாரித்தார். அப்போது, பள்ளியில் உள்ள ‘‘நாகராஜ் அண்ணா பிரேயர் முடிந்தவுடன் சாக்லேட் தருவதாக பக்கத்தில் உள்ள காலி அறைக்கு அழைத்து சென்று அசிங்கமாக நடந்து கொண்டார்’’ என சிறுமி கூறியுள்ளாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி ஷாலினியின் தாயார், உடனே அவளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறாள் என தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறுமி ஷாலினியின் பெற்றோர் கடந்த 29-ந்தேதி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சிறுமி படித்து வரும் பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்த நாகராஜ் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்ணீரில் இருந்து எரிபொருள் தயாரிக்க முடியும்!!
Next post 12 வருடங்களின் பின் திரிஷா பற்றிய உண்மை…!!