வேலூர் ஜெயிலில் 6-வது நாளாக நளினி-முருகன் உண்ணாவிரதம் நீடிப்பு

Read Time:1 Minute, 33 Second

Nalini&MotherPadma(RajivMurders).jpegராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி-முருகன் தம்பதிகள் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். நளினிக்கு ஆயுள் தண்ட னையும், முருகனுக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களது மகள் அரித்திரா என்ற மேகரா இலங்கையில் உறவினர்களுடன் தங்கியிருக் கிறார். அவளை தமிழகத்தில் தங்கி படிக்க விசா வழங்க கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. அது நிராகரிக்கப்பட்டது. எனவே அரித்திராவுக்கு விசா வழங்க மத்திய அரசை வலியுறுத்தி முருகன்-நளினி தம்பதி வேலூர் ஜெயிலில் சில மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்ததால் கைவிட்டனர்.
தற்போது முருகன்-நளினி மீண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து முருகனும், திங்கட்கிழமையில் இருந்து நளினியும் உண்ணா விரதம் இருந்து வருகிறார்கள். இன்று 6-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. அவர்களுடன் தொடர்ந்து ஜெயில் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகள் மீது தாக்குதல் நடத்துவோம்’ கருணாஅமைப்பு அறிவிப்பு
Next post கால் இறுதியில் நாளை மோதல்: போர்ச்சுக்கல், இங்கிலாந்து அணியை சமாளிக்குமா?