தென்கொரிய கப்பலுக்கு நடந்தது என்ன – 50 பேர் பலி?

Read Time:1 Minute, 58 Second

001hb
ரஷ்யா அருகே தென்கொரிய கப்பல் மூழ்கியதில் 50 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தென்கொரியாவை சேர்ந்த ஒரு தனியார் மீன்பிடி கப்பல் ஒன்று ரஷியாவின் பெர்ரிங் கடல் பகுதியில் ‘போலாக்’ உள்ளிட்ட ரக மீன்களை பிடிக்க சென்றது. அதில் மீனவர்கள் உள்பட 62 பேர் இருந்தனர்.

அவர்களில் 35 இந்தோனேசியர்கள், 13 பிலிப்பைன்ஸ் நாட்டினர், 11 தென்கொரியர்கள், ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தனர்.

இந்த நிலையில் அந்த கப்பல், ரஷ்யா அருகே கடல் பகுதியில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் தென்கொரியா சேர்ந்த மீட்பு படையினர் விரைந்தனர். 4 மீன்பிடி கப்பல்களும் அனுப்பபட்டன.

அவர்களால் சிலரை மட்டுமே மீட்க முடிந்தது. அதே நேரத்தில் கடலில் மூழ்கி பலியான ஒருவரின் உடலை மட்டுமே மீட்டனர்.

கப்பலில் இருந்த 50 மினவர்களை காணவில்லை. அவர்களை தேடியும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இருந்தாலும் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு ரஷ்யாவும் உதவதயாராக உள்ளது. கடல் கொந்தளிப்பாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தென்கொரியாவில் கடந்த ஏப்ரல் மாதம் சொகுசு கப்பல் மூழ்கியதில் 300 பயணிகள் பலியாகினர். அவர்களில் பெரும்பாலோனார் பள்ளி மாணவர்கள் ஆவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைத்திரிபாலவுக்கு ஆதரவு தர, ததேகூவுக்கு கோரிக்கை..
Next post பெண்ணுடன் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: கள்ளக்காதல் விவகாரமா? – போலீஸ் விசாரணை!!