16 திகதி பாகிஸ்தான் ஸ்தம்பிக்குமா?

Read Time:2 Minute, 22 Second

PAKISTAN-UNREST-POLITICSபாகிஸ்தானில் கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் முறைகேடு செய்து ஆட்சியை பிடித்ததாக பிரதமர் நவாஸ்செரீப் மீது பாகிஸ்தான் தெக்ரிக் – இஸ்லாம் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் புகார் தெரிவித்துள்ளார்.

எனவே நவாஸ் செரீப் பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி கடந்த ஆகஸ்டு 14–ந் திகதி சுதந்திர தினத்தன்று இஸ்லாமாபாத்தில் பாராளுமன்றம் முன்பு போராட்டம் தொடங்கினார். கடந்த 109 நாட்களாக அங்கு தனது கட்சி தொண்டர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார்.

ஆனால், நவாஸ் செரீப் பதவி விலக மறுத்து விட்டார். இருந்தும் அவர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இதற்கிடையே, இஸ்லாமாபாத்தில் நேற்று மிக பிரமாண்டமாக பேரணி நடத்தினார். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் இம்ரான்கான் பேசினார். அப்போது அவர் கூறும் போது, பாராளுமன்ற தேர்தலில் கள்ள ஒட்டுகள் மூலம் நவாஸ் செரீப் வெற்றி பெற்று விட்டார். எனவே, அது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இன்னும் 4 முதல் 6 வாரங்களில் விசாரணை நடைபெறுவதாக அறிவிக்க வேண்டும். இந்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

இல்லாவிட்டால் வருகிற 16–ந் திகதி பாகிஸ்தான் முழுவதும் போராட்டம் நடத்தி ஸ்தம்பிக்க செய்வோம். வருகிற 4–ந் திகதி லாகூரிலும், 8–ந் திகதி பைசலா பாத்திலும், 12–ந் திகதி கராச்சியிலும், போராட்டம் நடத்தி அரசின் செயல்பாட்டை முடக்குவோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் பரிதாப சாவு!!
Next post பெரும்பாலான சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஷ மீது வெறுப்பில்!!