இலங்கை தமிழரசு கட்சியின் 15 தீர்மானமும்,.. தமிழ் தேசிய கூட்டமைப்பும்.. – ஆர்கே!!
இலங்கை தமிழரசு கட்சி தனது 15வது மாநாட்டை வவுனியாவில் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றியிருந்தது.
5ம், 6ம், மற்றும் 7ம் திகதிகளில் நடந்து முடிந்த மாநாட்டு விடயம் சம்மந்தமாக மக்கள் பெரும் ஆதரவளித்திருந்தபோதும் சில மக்கள் மத்தியிலும், தோழமை கட்சிகளுக்கும் சில சர்சசைகள் எழுந்ததை அவதானிக்க முடிகிறது.
இலங்கை தமிழரசு கட்சி 15 வது மாநாட்டை வவுனியாவில் நடாத்துவது தொடர்பாகவும், செயர்பாடுகள் தொடர்பாகவும் ,வவுனியாவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த வாரம் 01.09.2014 அன்று இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பிரும், வட மகாணசபை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் 5ம், 6ம், மற்றும் 7ம் திகதிகளில் இலங்கை தமிழரசு கட்சியின் 15 வது மாநாட்டை நாடாத்த தீர்மனித்திருப்பதாகவும், முதல் நாள் பழைய கட்சி உறுப்பினர்களே கலந்துகொள்வார்கள் எனவும், இரண்டாம் நாளன்று இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாத்தெரிவு இடம்பெறும்மென்றும், மூன்றாம் நாள் இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கூட்டம் நடைபெறும் என்றும் அறிக்கப்பட்டிருந்தது. இறுதிநாளன்று சகல தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதன்பிரகாரம் இறுதிநாளன்று சகல தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுவதாக அறிக்கப்பட்டிருந்தும் இலங்கை தமிழரசு கட்சியானது அழைப்பு விடுத்தலில் பாரபட்சம் காட்டியிருந்ததை மாநாட்டில் அவதானிக்ககூடியதா இருந்தது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியான தமிழர் விடுதலை கூட்டணிக்கே அழைப்புவிடுக்டகவில்லை இது மக்கள் மத்தியல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வடக்கு கிழக்கு பகுதியில் இயங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சிறி தமிழிழ விடுதலை இயக்கம் தமிழ் தேசிய முன்னணி ஈழவர் ஜனநாயக முன்னணி போன்ற தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் இலங்கை தமிழரசு கட்சி எவ்வாறு செயற்படபோகுது என்ற கேள்வி எழுப்புவதர்ரும் ஏதுவாக அமைந்திருந்தது இவர்களின் செயர்பாடு.
இலங்கை தமிழரசு கட்சியினால் அழைப்பு விடுக்காத ஒரு கட்சின் தலைவர் குறிப்பிடுகையில் இவர்கள் என்னை தேர்தல் காலத்தில் மட்டம் பயன்படுத்துவார்கள் சகல கூட்டங்களுக்கும் என்கு அழைப்பு விடுப்பார்கர் ஏதோ நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றோம் என்பதை மக்கள் மத்தியில் காட்டிக்கொள்வதர்காகவே என்னையும் அழைப்பார்கள் இவ்வாறன நிகழ்வுக்கு என்னை அழைத்தால் இவர்களின் உண்மைபிரச்சினை வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்ற பயம் அவர்களுக்கு உண்டு என்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான அவர் இவ்வாறு தெரிவ்திருந்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் 15 தீர்மானமும் கூட்டமைப்பும்…
தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைபை ஆதரிப்பதன் நோக்கம் தமிழ் கட்சிகள் அனைத்தும் கைகோர்த்து ஒன்று சேர்ந்து நிற்கின்றன எமது தீர்வு விடயத்தில் ஒன்று சேர்ந்து சரியான முடிவெடுப்பார்கள் என் நட்பாசையில் தமிழ் தேசிய கூட்டமைபைப்புக்கு மக்கள் தமது ஆணையை வழங்குகின்றனர்.
மக்கள் எதை எண்ணி ஆணையை வழங்கினார்களோ அதர்காக கூட்டாக சேர்ந்துசெயர்படவேண்டிய தேவைப்பாடு பிரதிநிதிகளுக்கும் தமிழனின் தலைவிதியை நாம் கையில் எடுத்துவிட்டோம் என்று எண்ணும் தலைவர்களும் கவனத்தில் கொண்டு செயர்படவேண்டிய தேவைப்பாடு உள்ளது.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைபில் சுமார் ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஓவ்வொரு கட்சிகளுக்கும் ஒரு தனித்துவமும் தமக்கொன்று ஒரு கொள்கையும் உள்ளது தாம் பொதுக்கூட்டமும் மாநாடும் தமது கொள்கை பரப்புவதும் என்ற பல தேவைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இருந்தபோதும் மக்கள் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்வதையே விரும்புகின்றனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் 15வது மாநாட்டில் 15 தீர்மானம் எடுக்கப்பட்து. இத்தீர்மானத்தை இலங்கை தமிழரசு கட்சி தனித்து நின்று அமுல் படுத்தப்போகின்றதா? ஆல்லது கூட்டமைப்பு என்கின்ற குடையின் கீழ் நின்று அமுல் படுத்த எண்ணியுள்ளதா? அல்லது இத் தீர்மானங்களை அப்படியே கைவிடப்போகின்றதா? ஏன்ற கேள்விகள் எழும் நிலையில் பல சங்கடங்களையும் தமிழரசு கட்சிமீது சம்பிக்கையீனம் ஒன்று மக்கள் மத்தில் எழுகின்றன.
இவ்வாறாக ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக மாநாடு நடாத்தி தீர்மானங்களை எடுத்தல் 75 தீர்மானங்கள் வந்துவிடும் அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக அமையவும் வாய்ப்புக்களும் இருக்கும். இவ்வாறு சென்றால் கூட்டமைப்பாக சேர்ந்து என்ன முடிவெடுக்கப்படும். ஏன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இளைஞர் அணியை பொருத்தவரைக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வெரு அணியை உருவாக்குவதன் மூலம் தமிழ் இளைஞர்கள் மட்டத்திலும் ஓர் பிரிவினை வாதம் ஏற்படவும் வாய்ப்புக்கள் உருவாகலாம்.
தமிழருக்கு சரியான தீர்வு வரும்வரைக்கும் அனைத்து கட்டிசிகளும் ஒன்றுசேர்ந்து செயற்படுவதையும் கட்சி பேதமற்று தீர்மானங்கள் எடுப்பதையும் மூத்த தலைவர்கள் சுயநலமற்று முடிவெடுப்பதையும் எதிர்காலத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி வலுவான ஒரு கூட்டமைப்பை உருவாக்கி தமிழருக்கான தீர்வுப்பயணத்தை மேற்கொள்வதையே மக்கள் விரும்புகின்றனர்.
Average Rating