ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் விசேட சுற்றறிக்கை!!

Read Time:1 Minute, 34 Second

1990153798mecoஅரச மற்றும் அரச கூட்டுத்தாபன யாப்பு சபைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் தேர்தல்கள் ஆணையாளரால் விசேட சுற்றறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள பிரதானிகள், அரச கூட்டுத்தாபன மற்றும் யாப்பு சபை தலைவர்கள் ஆகியோருக்கு இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

அரச கார்கள், அலுவலகங்கள், கட்டிடங்கள் போன்றவற்றை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுதவிர ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊழியர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு நியமனம் வழங்குதல், பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் மட்டுப்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்ற மகள் என்றும் பாராமல் 12 வயது சிறுமியை சீரழித்த 40 வயது கொடியவன் கைது!!
Next post தேர்தல் சட்டம் மீறும் அரச ஊழியர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை!!