ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் மோசடி: கணவன்–மனைவி மீது புகார்!!

Read Time:1 Minute, 30 Second

7a8fbdf3-ce04-4bb3-9777-3dcc7e5415e6_S_secvpfவிருதுநகர் பர்மா காலனியை சேர்ந்தவர் பாத்திமாகனி (வயது35). பட்டதாரி ஆசிரியர் படிப்பு படித்துள்ளார்.

பாத்திமாகனிக்கு, அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக மதுராந்தகத்தைச் சேர்ந்த சேகர், அவரது மனைவி பத்மசுந்தரி ஆகியோர் கூறினார்கள். இதற்காக பாத்திமாகனியிடம் இருந்து 1½ வருடங்களுக்கு முன்பு ரூ.8 லட்சம் பெற்றுக் கொண்டனர்.

இந்த பணம் மதுராந்தகத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. நீண்ட நாட்கள் ஆகியும் பாத்திமாகனிக்கு வேலை கிடைக்காததால் இதுகுறித்து அவர், மதுராந்தகம் வங்கியில் விசாரித்தார். அப்போது வங்கியில் டெபாசிட் பணம் எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பாத்திமாகனி, இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் மதுராந்தகத்தை சேர்ந்த சேகர், அவரது மனைவி பத்மசுந்தரி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓமலூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சிறுவன் கைது!!
Next post மும்பை வீதியில் குப்பை அள்ளிய பிரியங்கா சோப்ராவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!