கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

Read Time:4 Minute, 27 Second

21413970351582679750fisherman new2இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் 254 விசைப்படகுகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடித்துவிட்டு நேற்று கரை திரும்பினர். அதில் 2 விசைப்படகுகள் மட்டும் கரைக்கு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் இது குறித்து 2 விசைப்படகு மீனவர்களிடமும் செல்போன் மூலம் விசாரித்தனர். அப்போது ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு சொந்தமான விசைப்படகு பழுதாகி விட்டதால் அதை சரி செய்து விட்டு வந்து விடுகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் விசைப்படகின் பழுதை சரிசெய்து கொண்டு இருந்த ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 40), அர்ச்சுணன் (45), இவரது மகன் சதீஷ் (22), ரவின் (20) அஞ்சப்பன் மகன்கள் கலைவாணன் (25), தினேஷ் (19), பாண்டியன் மகன் சரத் (22), மூர்த்தி மகன் பன்னீர்செல்வம் (28), ஜெசியமான் மகன் ஓமலிங்கம் (19), பன்னீர்செல்வம் மகன் விஜேந்திரன் (25) ஆகிய 10 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

மேலும் 2 விசைப்படகுகளை யும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

இதேபோல், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ராமேசுவரம் நம்புசேகரன் என்பவருக்கு சொந்தமான படகு மட்டும் கரை திரும்பவில்லை.

இந்த படகில் சரவணன், சேவியர்ராஜ், ஜான் போஸ்கோ, களஞ்சியம் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று இருந்தனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென படகில் என்ஜின் பழுதாகி நின்றது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் மற்றொரு படகில் மீனவர்கள் அந்த படகை மீட்கச் சென்றனர்.

ஆனால் அதற்குள் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் படகில் டீசல் தீர்ந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அந்த படகையுயும், 4 மீன வர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்று யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 14 தமிழக மீனவர்களையும் நேற்று இரவோடு இரவாக இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி 14 மீனவர்களையும் டிசம்பர் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அவர்களை யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னிப்பு வழங்கியது மஹிந்த: மோடிக்கு விஜய் நன்றி தெரிவிப்பு!!
Next post அநீதி ஆட்சி நடத்தும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டோம்!!