“சுடிதாரை” தேர்வு செய்வது, எப்படி தெரியுமா?..!!

Read Time:2 Minute, 53 Second

images (1)பிரெஞ்ச் கிரேப் மெட்ரீரியல், பேஷனாக இருந்த இந்த சுடிதார் மறுபடியும் வந்துள்ளது. சுடிதாரின் பொட்டம் ரௌசர் மாதிரியும் தெரியும். ஸ்கேர்ட் மாதிரியும் தெரியும். சின்னச் சின்ன சீக்வென்ஸ் வேர்க் இந்தச் சுடிதாரை ஸ்டைலாகக் காட்டுகிறது. உங்கள் தோள்கள் நேராக இல்லையா? அகன்ற நெக்காக தைத்துக்கொள்ளுங்கள்.

சற்று சரிவான தோள்களா? “நரோ நெக் உங்களுக்கு எடுப்பாக இருக்கும். கூன் உள்ளவரா? அப்படியென்றால் தோளில் “இன்ஸைட் கட் கொடுத்து ரெய்லரிடம் தைக்கச் சொல்லுங்கள். ஒல்லியாக இருப்பவர்கள் மற்றும் கழுத்து நீளமாக இருப்பவர்களுக்கு காலர் சுடிதார் மிகப்பொருத்தமாக இருக்கும்.

அதிக சதைப்பிடிப்புடன் இருப்பவர்கள் கழுத்தின் பின்புறம் மட்டும் காலர் வைத்துத் தைத்துக் கொண்டால் அழகாக இருக்கும்.

* குள்ளமாக இருப்பவர்கள் லோங் டொப் போடாதீர்கள். அது உங்களை இன்னமும் குள்ளமாகக் காண்பிக்கும். முழங்கால் வரையிலான டொப் குர்தா போட்டுக் கொண்டால் உயரமாகத் தெரிவீர்கள். அதேபோல நெடுங் கோடுகள் கொண்ட சுடிதார் உங்களை உயரமாகக் காட்டும்.

* முடிந்தவரை குள்ளமாக இருப்பவர்கள் சுடிதாரின் டொப் ஒரு கலர், பொட்டம் பகுதி ஒரு கலர் என்று போடாதீர்கள். இரண்டும் வேறுபட்ட கலர்களாக இருந்தால் உங்களின் தோற்றத்தை உயரக் குறைவாக காண்பித்து விடும். ஒரே கலர் சுடிதார்தான் உங்களுக்கு ஏற்றது.

* சிலருக்கு இடுப்பு கொஞ்சம் அகலமாக இருக்கும். அப்படியிருப்பவர்கள் இடுப்பிலிருந்து ஸ்லிப் கட் வருமாறு சுடிதார் தைத்துக் கொள்ளலாம். அதேபோல் வயிறு பெரிதாகத் தெரிபவர்கள் இடுப்பிலிருந்து “ஏ மாதிரியான லைன் வருமாறு தைத்துக்கொண்டால் வயிறு ஒட்டியதாகத் தெரியும்.

* உயரமானவர்கள் குள்ளமான குர்தா போடக் கூடாது. அப்படிப் போட்டால் கால் நீளமாகத் தெரியும்.

* ஷிபோன் மெட்ரீரியல் கவர்ச்சிகரமான தோற்றத்தைத் தரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொய்ப்பீரங்கிகளுக்குப் பிறகுதான், நீங்கள் எல்லாம் அணிதிரளப் போகிறீங்களோ மக்காள்? -வடபுலத்தான் (கட்டுரை)!!
Next post ஒன்றரை மாத ஆண் குழந்தையை விட்டு சென்ற பெண் யார்?: சி.சி.டி.வி கேமரா மூலம் போலீசார் ஆய்வு!!