தேவதானப்பட்டி பகுதியில் மறைந்து வரும் காது வளர்க்கும் பழக்கம்!!

Read Time:1 Minute, 57 Second

195a8350-fec0-4373-9e23-ffbd23bf3b1d_S_secvpfதேவதானப்பட்டி பகுதியில் காது வளர்க்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, புல்லக்காபட்டி, எருமலைநாயக்கன்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் காது வளர்க்கும் முறை ஆண்களிடமும், பெண்களிடமும் இருந்து வந்தது. காது குத்துதல் என்பது முதன் முதலில் பழக்கமாகி பின்னர் அது வழக்கமாகி சடங்காக மாறியிருக்கிறது.

இந்த காது வளர்க்கும் பழக்கம் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களிடத்திலும் இருந்தது தான் வியப்பிற்குரியது. பெண் குழந்தைகள் பிறந்த சில தினங்களில் கூடைமுடையும் சமூகத்தை சேர்ந்தவர்களை வரவழைத்து அக்குழந்தையின் காதில் துளையிட்டு அதில் பஞ்சை திரியாக வைத்து விடுவார்கள்.

அதன் பின்னர் அரசளிவாளி என காதில் ஒவ்வொரு இடத்திலும் வளையங்களை பொருத்தினர். தற்காலத்தில் மாட்டல், பூங்கொப்புமணி, பூட்டுக்காப்பு, தொங்கல், மாட்டல், அட்டியல், பொன்மனி, திருச்சூலி, அலுக்குத்து, சரப்பளி போன்ற ஆபரணங்கள் காதுகளில் குத்தப்படுகிறது. தற்பொழுது கால மாற்றத்தினால் காது வளர்க்கும் முறை குறைந்து காதுகுத்துதல் மற்றும் இடைக்காது குத்தும் முறையாக மாறியுள்ளது. விஞ்ஞான யுகத்தில் மாறிய பழக்கங்களில் காது வளர்க்கும் முறையும் தற்போது அழிந்து விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீபிகாவுக்கு மீண்டும் துளிர்விட்ட ஆசை!!
Next post கவர்ச்சிக்கு மாற முடியாது தவிக்கும் சமந்தா!!