ரூ. இரண்டரை லட்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கையும்-கரன்சியுமாக கைது!!

Read Time:1 Minute, 29 Second

48646a98-b856-44b4-9a27-91de44bd363a_S_secvpfஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்ற 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு அதில் முன்பணமாக இரண்டரை லட்சம் பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம், அகமது நகர் மாவட்டத்தில் உள்ள பத்தார்டி போலீஸ் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக ஒரு பெண் மற்றும் அவரது மைத்துனர் மீது புகார் அளிக்கப்பட்டு, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க இவர்களின் உறவினரிடம் பத்தார்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரான சுபாஷ் லக்‌ஷ்மண் அன்முல்வர் என்பவர் 5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று பேரம் பேசியுள்ளார்.

நேற்று, முதல் தவணையான இரண்டரை லட்சம் ரூபாயை அவர் பெற்றுக் கொண்டபோது, பணம் கொடுத்த நபர் ஏற்கனவே அளித்திருந்த புகாரையடுத்து அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அவரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொள்ளையடித்த பணக்கட்டுகளின் மீது உறங்கிய இளைஞர் கைது!!
Next post சேலத்தில் இளம்பெண் மாயம்: போலீசில் புகார்!!