பாலஸ்தீன மந்திரிகளை இஸ்ரேல் கைது செய்தது

Read Time:1 Minute, 28 Second

palastinam1.jpgஇஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனத்தில் உள்ள காசாவுக்குள் நுழைந்தது. அதற்கு பாதுகாப்பாக போர் விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின. பாலஸ்தீன தீவிரவாதிகள் கடத்திய இஸ்ரேல் ராணுவ வீரரை மீட்பதற்காக காசா நகருக்குள் ராணுவம் நுழைந்தது. காசா பகுதியை ஆக்கிரமித்து இருந்த இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில்தான் அங்கிருந்து வாபஸ் ஆனது. இப்போது மீண்டும் அங்கு அது நுழைந்து உள்ளது. அதிகாலையில் பொழுது விடிவதற்கு முன்பே இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகருக்குள் நுழைந்தன. ராணுவம் தாக்குதல் நடத்த இருக்கும் பகுதியில் இருந்து வெளியேறும்படி கேட்டுக்கொள்ளும் துண்டுபிரசுரங்களை போர்விமானங்கள் வீசின. பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன மந்திரிகளை பிடித்துச்சென்றது. கிட்டத்தட்ட 64 ஹமாஸ் அதிகாரிகளை ராணுவம் கைது செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மண்டபம் முகாம்புதுப்பிக்க ரூ.27 லட்சம்
Next post நடிகர் ஜாக்கிசான் சொத்தில் பாதியை ஏழைகளின் நலனுக்காக எழுதி வைத்தார்