5 மீனவர்கள் இன்று திருச்சி பயணம்: இலங்கை குறித்து இந்தியா, மீனவர்கள் குடும்பம் மகிழ்ச்சி!!

Read Time:5 Minute, 26 Second

19580491351926593129INDU-SRI-LANKAமரண தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவர் இன்று (20) வியாழக்கிழமை கொழும்பில் இருந்து விமானம் மூலம் திருச்சி நோக்கி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கையால் விடுவிக்கப்பட்ட நிகழ்வு, மனதுக்கு இதம் தரும் நிகழ்வு என்று பாரதீய ஜனதாக்கட்சி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் குறித்த நிகழ்வு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியின் ஊடாக கலந்துரையாடியதன் பின்னாலே இந்த வாய்ப்பு ஏற்பட்டதாக பாரதீய ஜனதாக் கட்சியின் பேச்சாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த தமிழக மீனவர்களை விடுவித்த பெருமை இந்திய மத்திய அரசாங்கத்தை சேரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மீனவர்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

நேற்று 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் ராமேசுவரம், தங்கச்சிமடம் மீனவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகழ்ந்தனர். மீனவர்கள் விடுதலை குறித்து மீனவர் லாங்லெட்டின் தாய் இன்பெட்ரா மகிழ்ச்சியுடன் கூறியதாவது:–

எனது 3 ஆண்டுகள் பிரார்த்தனை வீண் போகவில்லை. தூக்கு தண்டனை பற்றி தீர்ப்பு வெளியான நாள் முதல் நடைபிணமாக இருந்தோம். இப்போது அளவற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. மீனவர்களை விடுதலை ஆனதால் கடவுளுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

எங்களது மீனவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட அனைத்து தரப்பு மக்களையும் உயிருள்ள வரை மறக்க மாட்டோம். எங்கள் கண்ணீரை காணிக்கை யாக்குகிறோம். எனது மகன் வீட்டிற்கு வந்ததும் உடனடியாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

எமர்சின் மனைவி லாவண்யா கூறியதாவது:–

எனது கணவர் கைதானபோது நான் 4 மாத கர்ப்பிணியாக இருந்தேன். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் இடி விழுந்ததுபோல் இருந்தது. தினமும் அவருக்காக ஆண்டவனிடம் முறையிட்டு வந்தேன். தந்தையின் முகத்தைகூட பார்க்காத குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தேன்.

தற்போது மீனவர்கள் அனைவரும் கடவுளின் அருளால் விடுதலையாகி உள்ளனர். மீனவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது குழந்தை தந்தையின் முகத்தை பார்த்து சந்தோசப்படுவான். கணவர் வந்ததும் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்துவேன். இந்த ஆண்டுதான் எங்களுக்கு கிறிஸ்துமஸ் விழா. இந்த விழாவை அனைவரும் சிறப்பாக கொண்டாடுவோம்.

வில்சன் மனைவி ஜான்சி கூறியதாவது:–

மீனவர்கள் விடுதலை பற்றி கேள்விபட்டதும் எண்ணற்ற மகிழ்ச்சி அடைந்தோம். நேற்று மாலையில் எனது கணவர் விடுதலை செய்யப்பட்டது பற்றி என்னிடம் செல்போனில் பேசினார். அவரது குரலை கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்தேன்.

மீனவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்–அமைச்சர் மற்றும் இலங்கை அதிபர் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

மீனவர் அகஸ்டல் மனைவி பாக்கியசெல்வி கூறியதாவது:–

கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை கொண்டாடவில்லை. தற்போது மீனவர்கள் 5 பேரும் விடுதலையாகி உள்ளனர். இந்த ஆண்டுதான் எங்களுக்கு சிறப்பான கிறிஸ்துமஸ்–புத்தாண்டு ஆக இருக்கும் என அவர் ஆனந்தத்துடன் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜகிரிய பாடசாலை அதிபரை காணவில்லை!!
Next post ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கவும் போட்டியிடவும் மஹிந்தவுக்கு ஸ்ரீசுக அனுமதி!!