அமெரிக்காவில் 26 வயது பெண்ணை மணக்கும் 80 வயது கொலையாளி!!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் மேன்சன் (80). இவர் கடந்த 1969ம் ஆண்டுகளில் 7 பேரை கொடூரமாக கொலை செய்தார்.
குறிப்பாக டைரக்டர் ரோமன் போலன்ஸ்கியின் 8½ மாத கர்ப்பிணி மனைவி ஷரோன் டேட் என்பவரை படுகொலை செய்தார்.
இக் கொடூர கொலைகளுக்காக கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்கும்படி தண்டனை வழங்கப்பட்டது.
தற்போது இவர் லாஸ்ஏஞ்சல்ஸ் சிறையில் உள்ளார். அங்கு அவரை சூப்டன் எலைன்ஸ் பர்டான் என்ற 26 வயது இளம் பெண் அடிக்கடி பார்க்க வந்தாள். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.
அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மேன்சன் சிறை கைதி என்பதால் கல்போர்னியா மறுவாழ்வு சீர் திருத்த துறையில் அனுமதி பெற வேண்டும்.
அவர் தன்னை விட 54 வயது குறைந்த பர்டனை திருமணம் செய்ய அனுமதி கேட்டு கடந்த 7–ந்தேதி விண்ணப்பம் செய்தார். அதை ஏற்று திருமணம் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்கின்றனர்.
மேன்சன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த திருமணம் குறித்து 26 வயது பெண் பார்டன் கூறும் போது, ‘‘நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் எனவே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
நான் அவருடன் முழுமையாக வாழ்வேன். அவரும் என்னுடன் வாழ் நாள் முழுவதும் இருப்பார்’’ என்றார். தன்னை ஒரு ஸ்டார் என்று புகழ்ந்து கொண்டார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating