கர்ப்பிணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற 4 பாகிஸ்தானியர்களுக்கு மரண தண்டனை!!

Read Time:5 Minute, 6 Second

02924531-b787-4da2-8ebd-bd9028ff0f8c_S_secvpf‘கவுரவக் கொலை’ என்ற பெயரால் பாகிஸ்தானின் லாகூர் நகர ஐகோர்ட்டின் வாசலில் கர்ப்பிணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற அவரது தந்தை, சகோதரர்கள், முன்னாள் கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நான்கானா சாகிப் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஃபர்ஸானா பர்வீன் (வயது 25). இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் மஸார் இக்பால் என்பவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில், தனது மனதுக்கு பிடித்த முஹம்மது இக்பால்(45) என்பவரை காதலித்த ஃப்ர்ஸானா, அவரை திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறினார்.

முதல் கணவரான மஸாரிடமிருந்து இன்னும் விவாகரத்து பெறாத நிலையில் தனது மகளை முஹம்மது இக்பால் என்பவர் கடத்திச் சென்றுவிட்டதாக ஃபர்ஸானாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, இக்பாலை கைது செய்த போலீசார், அவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதற்காக கடந்த மே மாதம் 27-ம் தேதி, கர்ப்பிணியான தனது மனைவி ஃபர்ஸானாவுடன் லாகூர் கோர்ட்டின் அருகே முஹம்மது இக்பால் வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அவர்கள் இருவரையும் பர்ஸானாவின் தந்தை, சகோதரர், முன்னாள் கணவர் மற்றும் இரு உறவினர்கள், என 5 பேர் வழிமறித்தனர். தங்களது குடும்ப கவுரவத்தை குலைத்து விட்டதாக குற்றம்சாட்டி தகராறு செய்தனர்.

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், கோர்ட்டின் வெளியே கொட்டிக் கிடந்த செங்கற்களை எடுத்து வீசி, அந்த தம்பதியரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஃபர்ஸானா உயிரிழந்தார். அவரது கணவரான இக்பால் காயங்களுடன் உயிர் தப்பினார்.

கர்ப்பிணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற இந்த கோரப்படுகொலை பாகிஸ்தான் மக்களை மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து மனித நேயர்களிடையிலும் கொதிப்பை உண்டாக்கியது.

இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர், அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பல தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பிற நாடுகளும் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுத்து, சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தின.

இதனையடுத்து, லாகூர் நகரில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டிடம் இந்த கொலை வழக்கின் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. சுமார் 6 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை, இருதரப்பு வக்கீல்களின் வாதம் ஆகியவை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

‘கவுரவம்’ என்ற பெயரில் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் ஃபர்ஸானா பர்வீனை கல்லால் அடித்துக் கொன்ற அவரது தந்தை முஹம்மது அஸீம், சகோதரர் முஹம்மது ஸாஹித், முன்னாள் கணவர் மஸார் இக்பால் மற்றொரு உறவினரான ஜுமா கான் ஆகியோருக்கு மரண தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஹாரூண் லத்திப் உத்தரவிட்டார்.

கொலையில் தொடர்புடைய மற்றொரு உறவினருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

லாகூர் நகரை உள்ளடக்கிய பஞ்சாப் மாகாணத்தில் கடந்த (2013) ஆண்டில் மட்டும் ‘கவுரவக் கொலை’ என்ற பெயரில் சுமார் 870 பெண்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் வாலிபரை கொன்று சமைத்த பெண்!!
Next post புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த மணமகள்: அன்றிரவே விவாகரத்து!!