இந்தியாவின் அவல நிலை: 60 கோடி மக்கள் திறந்தவெளிகளையே கழிவறைகளாக பயன்படுத்துகின்றனர்- ஐ.நா.கவலை!!

Read Time:2 Minute, 21 Second

be5b844e-daad-4578-915a-0f7c08b89e94_S_secvpfசீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடாக அறியப்படும் இந்தியாவில் (மொத்த மக்கள் தொகை 126 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம் பேர்) 597 மில்லியன் மக்கள் (சுமார் 60 கோடி மக்கள்) திறந்தவெளிகளையே கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அவல நிலையை மாற்ற உயரிய அளவிலான அரசியல் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

உலக கழிவறை தினமான இன்று வெளியிடப்பட்ட இது தொடர்பான ஐ.நா. ஆய்வறிக்கை, உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் (ஒரு பில்லியன் மக்கள்) பொது இடங்களையே கழிவறையாக பயன்படுத்தி வருவதாகவும், இவர்களில் 82 சதவீதத்தினர் (சுமார் 825 மில்லியன் மக்கள்) இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் மட்டும் வசித்து வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த 10 நாடுகளில் முதல் இடம் பெற்றுள்ள இந்தியாவில் நாள்தோறும் 597 மில்லியன் மக்கள் (சுமார் 60 கோடி பேர்) திறந்தவெளிகளையே கழிவறையாக்கிக் கொள்கின்றனர் என இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலின் இரண்டாமிடத்தில் (54 மில்லியன் மக்கள்) இந்தோனேசியா, மூன்றாமிடத்தில் (41 மில்லியன் மக்கள்) பாகிஸ்தான், நான்காமிடத்தில் (11 மில்லியன் மக்கள்) நேபாளம், ஐந்தாமிடத்தில் (10 மில்லியன் மக்கள்) சீனா உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், நைஜர், மொஸாம்பிக் ஆகிய நாடுகள் முறையே 6 முதல் 10 வரையிலான இடங்களை இந்த பட்டியலில் பிடித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டுக்கல் அருகே மாணவியை அடித்ததாக ஆசிரியர் மீது புகார்!!
Next post அமெரிக்காவில் வாலிபரை கொன்று சமைத்த பெண்!!