ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 18 இடங்களில் கடற்படை தளங்களை அமைக்கிறது சீனா?

Read Time:2 Minute, 27 Second

2981644601172219938navy-war-ship3எதிர்வரும் 10 வருடங்களுக்குள் சீன மக்கள் விடுதலை கடற்படை பல இடங்களில் 18 கடற்படைத் தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்து சமுத்திரத்தின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்மத்திய பகுதிகளில் பாகிஸ்தான், இலங்கை, மியான்மார் உள்ளிட்ட நாடுகளில் இந்த கடற்படைத் தளங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொன்சிங் துறைமுகம் (தென்கொரியா), மொரெஸ்பி துறைமுகம் (பப்புவா நியூகினியா), சிகனோக்வில்லே துறைமுகம் (கம்போடியா), கோ லண்டா துறைமுகம் (தாய்லாந்து), சிட்வே துறைமுகம் (மியான்மார்), டக்கா துறைமுகம் (பங்களாதேஸ்), க்வாட்டர் துறைமுகம் (பாகிஸ்தான்), ஹம்பாந்தோட்டை துறைமுகம் (இலங்கை), மாலைத்தீவு, சிச்சேயில்ஸ் உள்ளிட்ட இடங்களில் சீன தனது கடற்படை தளங்களை அமைக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்தின் மூலம் பிராந்திய மற்றும் உலக உறுதித் தன்மை, சர்வதேச கடல்வழிப் பாதை பாதுகாப்பு போன்றவற்றை தக்கவைத்துக் கொள்ள சீனா முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளும் பொருட்டு சீனா பரஸ்பர நன்மை, நட்பு ஆலோசனை போன்றவற்றை வழங்கி கடற்படைத் தளங்களை அமைக்கத்திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சீனாவானது அமெரிக்கா போன்ற கடற்படைத் தளங்களை அமைத்துக் கொள்ளவில்லை என்ற விமர்சனமும் வெளி உலகில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

உலகில் இரண்டாவது பெரிய கடற்படையை கொண்ட நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது. சீன கடற்படையில் பல்திறமை கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீனவர்கள் 5 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி!!
Next post முச்சக்கர வண்டி வீட்டு கூரைமீது விழுந்து இராணுவ வீரர்கள் இருவர் பலி மூவர் படுகாயம்!!