காரணம் தேடும் முஸ்லிம் கட்சிகள் – ஏ.எல். நிப்றாஸ் (சிறப்பு கட்டுரை)…..!!

Read Time:29 Minute, 40 Second

9b5c0-lanka-rdv-tmagarticleமுஸ்லிம் அர­சி­யலில் சில்­லறை வியா­பா­ரி­களும் இருக்­கின்­றார்கள், மொத்த வியா­பா­ரி­களும் இருக்­கின்­றார்கள். இவர்­களுள் சிலர் சைனா ஃபோனை சைனா போன் என்று சொல்லி விற்­பனை செய்­கின்­றார்கள். இன்னும் ஒரு சிலர் சைனா ஃபோனை ஒரி­ஜினல் நொக்­கியா ஃபோன் என்று சொல்லி விற்று சமூ­கத்தை ஏமாற்­று­கின்­றார்கள்.

இது தேர்தல் நெருங்கிக் கொண்­டி­ருக்கும் காலம். உயர் நீதி­மன்றம் ஜனா­தி­ப­திக்கு மூன்­றா­வது தடவை போட்­டி­யிட முடியும் என்று பரிந்­துரை செய்­த­தை­ய­டுத்து தேர்­த­லுக்­கான கள நில­வ­ரங்­களை நாடி­பி­டித்துப் பார்க்கும் பணி­களை அர­சாங்கம் முடுக்கி விட்­டுள்­ளது. தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் குறை­வ­டைந்து, தேர்தல் திகதி பற்­றிய அறி­விப்பு இன்னும் சில தினங்­க­ளுக்குள் வெளி­யாகும் வாய்ப்பு அதிகரித்­தி­ருக்­கின்­றது.

இந்த தேர்­தலில் முஸ்லிம் கட்­சி­களின் நிலைப்­பாடு என்­ன­வாக இருக்கும் என்ற வாதப் பிர­தி­வா­தங்­களே தேநீர்­கடை தொடக்கம் மேலிடம் வரை வியா­பித்­துள்ள விட­ய­மாக இருக்­கின்­றது. கடந்த காலங்­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் போன்ற கட்­சி­களின் நதி­மூ­லமும் அவற்றின் சேரு­மி­டமும் ஒன்­றாக இருந்­தது. ஆனாலும் சிறு­சிறு ஓடை­க­ளாக பிரிந்து வேறு­வேறு வழி­களில் பய­ணித்து கடலை வந்­த­டை­வ­தையே அவர்கள் ‘சாணக்­கியம்’ என்றும் ‘வியூகம்’ என்றும் கற்­பிதம் சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அதனை வைத்துப் பார்க்­கின்ற போது பொதுவில் முஸ்லிம் கட்­சிகள் ஆளும் கட்­சியை ஆத­ரிப்­ப­தற்­கான சகு­னங்­களே அதி­க­முள்­ளன என்­பது வாக்­காளப் பெரு­மக்­களின் உள்­ம­ன­திற்கு புரி­கின்­றது. எந்­த­வித கொள்கையும் இன்றி ஆளும் கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஏனைய முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பற்­றியும் எதிர்க்­கட்­சியில் இருந்­து­கொண்டு வெறு­மனே ‘அறிக்கை அர­சி­யலை’ மட்டும் நடத்திக் கொண்டிருக்­கின்ற சில உறுப்­பி­னர்கள் பற்­றியும் புதி­தாக ஊகிப்­ப­தற்கு ஒன்­று­மில்லை.

சுற்றி வளைத்தல்

முஸ்லிம் கட்­சிகள் இம் முறை தேர்­தலில் எந்த முடிவை சொல்­வ­தற்கு தயங்­கு­கின்­றனர் என்­பதும் சுற்றி வளைத்து அவர்கள் எங்கு வந்து நிற்­பார்கள் என்­பதும் இம­ய­மலை ரக­சி­ய­மல்ல. ஆனால், பொது­வாக அரசியல் தொடர்பில் வெறுப்­ப­டைந்­தி­ருக்கும் மக்­க­ளிடம் என்ன கார­ணத்­தையும் கற்­பி­தத்­தையும் சொல்லி வாக்­கு­களை சூறை­யா­டலாம் என்­ப­தைத்தான் இப்­போது யோசித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்­களே தவிர, சமூகத்தின் சார்பில் என்ன கோரிக்­கையை வேட்­பா­ளர்­க­ளிடம் முன்­வைக்­கலாம் என்­பது பற்­றி­யல்ல.

என்ன முடிவை நீங்கள் எடுத்­தி­ருக்­கின்­றீர்கள் என்று முஸ்லிம் கட்­சி­க­ளிடம் கேட்டால், “தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதும் எமது முடிவு வெளி­யாகும். அது மக்­களின் விருப்பு வெறுப்­புக்­களை, நலன்­களை முன்னிலைப்­ப­டுத்­தி­ய­தாக இருக்கும். தவிர, பத­வி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தா­க­வல்ல” என்று ஒரு ரெடிமேட் பதிலை கூறிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரைக்­கும்தான் இந்த மழுப்­ப­லான பதில்கள் கைகொ­டுக்கும். கத்­த­ரிக்காய் முற்­றினால் சந்­தைக்கு வரத்­தானே வேண்டும்.

அப்­படிப் பார்த்தால்…. முஸ்லிம் காங்­கி­ரஸும் சரி தேசிய காங்­கி­ரஸும் சரி, மக்கள் காங்­கி­ரஸும் சரி – மக்கள் என்ன நினைக்­கின்­றார்கள் என்­பதை கருத்துக் கணிப்பு செய்யும் பணி­க­ளி­லேயே இன்­றைய பொழுதுகளை கழித்துக் கொண்­டி­ருக்க வேண்டும்.

ஆனால் பர­வ­லான மக்கள் அபிப்­பி­ராயம் எங்­கா­வது சேக­ரிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் பக்­க­வாட்­டில்தான் தலையை ஆட்ட வேண்­டி­யி­ருக்கும். கட்­சியில் அக்­க­றை­யுள்ள உறுப்­பி­னர்­களின் ஆலோ­ச­னையைக் கூட தட்டிக் கழிப்­ப­வர்கள் மக்­களின் விருப்­பத்தை ஏற்றுக் கொண்டு செயற்­ப­டு­வார்கள் என்று எண்­ணு­வது முட்­டாள்­த­னம்தான்.

‘மக்கள்’ அல்­லது ‘வாக்­காளப் பெரு­மக்கள்’ எனும் தரப்­பினர் யார் என்­பதை இவ்­வி­டத்தில் முஸ்லிம் கட்­சிகள் யாவும் தெளி­வாக விளங்கிக் கொள்ள வேண்டும். கட்­சிக்­காக போஸ்டர் ஒட்­டி­ய­வர்­களும் எதி­ர­ணியின் வாக­னத்­திற்கு கல் எறிந்­த­வர்­களும் கள்ள வாக்கு போட்­ட­வர்­களும் கொந்­த­ராத்துக் காரர்­களும் மட்­டு­மல்ல.

உண்­மையில் இவர்­களுள் பலர் தமது சொந்த இலா­பத்­திற்­காக ஒட்டிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால் உண்­மை­யி­லேயே முஸ்லிம் கட்­சி­களின் நகர்­வு­களில் அக்­கறை செலுத்தும் வாக்­கா­ளர்கள் அல்­லது போரா­ளிகள் என்போர் இதற்கு அப்­பாற்­பட்ட தரப்­பி­ன­ராவர்.

கொழும்­பி­லி­ருந்து தமது படை பட்­டா­ளங்­க­ளோடு கிளம்பிச் சென்று ஒரு கூட்­டத்தை ஏற்­பாடு செய்து, அதில் தனது கருத்­துக்­களை ஒப்­பு­வித்­து­விட்டு வந்தால் அது ‘மக்­களின் கருத்­துக்­களை அறிதல்’ ஆகி­வி­டாது. தலைவர் ஒவ்­வொரு வீடாகச் சென்று கருத்­த­றிய முடி­யாது என்றும் அதற்­கா­கவே அமைப்­பா­ளர்­க­ளையும் இணைப்­பா­ளர்­க­ளையும் நிய­மித்­துள்ளோம் என்றும் சில அர­சி­யல்­வா­திகள் கூறு­வ­துண்டு.

உண்­மைதான் முஸ்லிம் கட்­சிகள் எல்­லா­வற்­றுக்கும் ஏகப்­பட்ட அமைப்­பா­ளர்­களும் பிர­மு­கர்களும் ஒவ்­வொரு ஊரிலும் இருக்­கவே செய்­கின்­றனர். ஆனால் பெரிய ‘பில்ட்­அப’;காட்டிக் கொண்டு திரி­கின்ற அதில் அநேக­ருக்கு கள­நி­லை­மைகள் பற்­றிய போதிய அறிவு கிடை­யாது.

வாக்­க­ளிக்கும் மக்­க­ளுடன் கிர­ம­மான தொடர்பு கிடை­யாது. எந்த அமைப்­பா­ள­னா­வது ஒரு கடை­நிலை வாக்­கா­ளனை, உடம்­பிற்கு முடி­யாமல் கட்­டிலில் கிடக்கும் பழைய போரா­ளியை சந்­தித்து உங்­க­ளது அபிப்­பிராயம் என்­ன­வென்று கேட்­ட­தாக சரித்­தி­ரமே இல்லை.

எப்­போதும் இவ்­வா­றா­ன­வர்கள் தலை­வர்­க­ளுக்கு “ஆமாம்” போடு­கின்­ற­வர்­க­ளா­கவே இருப்­பார்கள். ‘மக்­களின் விருப்­புகள்’ என்ற அடை­மொ­ழி­யுடன் இவர்கள் சொல்­கின்ற கருத்­துக்கள் பெரும்­பாலும் அவர்­க­ளது சொந்த நிலைப்­பா­டு­களே ஆகும். எல்லா தீர்­மா­னத்­தையும் தலை­வரே எடுத்­து­விட்டு, கட்சி உறுப்­பி­னர்­களும் மக்­களும் இதையே விரும்­பு­கின்­றார்கள் என்று அறி­விப்புச் செய்­வ­தற்கு இது ஒப்­பா­னது.

எதிர்க்­கட்­சியின் கைய­று­நிலை

இந்த நாட்டின் அர­சி­யலின் தற்­போ­தைய நிலை­மைக்கு பல கார­ணங்கள் இருக்­கின்­றன. பிர­தான எதிர்க்­கட்சி பல­மி­ழந்து போனமை இதில் முக்­கி­ய­மா­னது. ஐக்­கிய தேசிய கட்சி வர­லாற்றில் என்­று­மில்­லாத பல­வீ­னத்தை அடைந்­துள்­ளது எனலாம்.

அக்­கட்சி சரி­யான பலத்­துடன் இருந்­தி­ருந்தால் தவ­று­களை தட்டிக் கேட்க முடி­வது மட்­டு­மன்றி ஆட்சி மாற்­றத்­திற்­கான சாத்­தி­யக்­கூ­று­களும் அதி­க­ரித்­தி­ருக்கும். ஆனால் மூன்­றா­வது முறை­கூட ஒரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தனித்­து­நின்று தோற்­க­டிக்க முடி­யாத நிலை­யி­லேயே பிர­தான எதிர்க்­கட்சி இருப்­பதால், தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யையும் அவ­ரது ஆட்­சி­யையும் இன்னும் பல வரு­டங்­க­ளுக்கு அசைக்க முடி­யாது என்ற ஒரு எண்­ணப்­பாடு பர­வ­லாக ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் கட்­சி­களும் சிறு கட்­சி­களும் ஆளுந்­த­ரப்பில் சங்­க­ம­மாகி இருப்­ப­தற்கு இதுவும் உப காரணம் எனச் சொல்­லலாம்.

தனித்து நின்று ஜனா­தி­பதி மஹிந்­தவை வீழ்த்­து­வது சிரமம் என்ற நிலைப்­பாட்­டுக்கு வந்த ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஏனைய எதி­ரணி கட்­சி­களும் பொது வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றன. இது ஒரு நல்ல உத்­தியே. இருப்­பினும் அறு­தியும் உறு­தி­யு­மாக ஒரு பொது­வேட்­பா­ளரை ஏக­ம­ன­தாக பிர­க­டனம் செய்­வதில் இன்னும் இழு­பறி நிலை தொடர்­கின்­றது.

எதிர்க்­கட்­சிகளால் தீர்­மா­னிக்­கப்­படும் யாரை வேண்­டு­மா­னாலும் பொது வேட்­பா­ள­ராக போடலாம் என்ற கருத்­துடன் உடன்­பட முடி­யாது. ஏனென்றால் ஜனா­தி­பதி ஆசனம் என்­பது வெளியில் இருந்து பார்ப்­ப­வர்கள் நினைப்­பது போல் மிக குளிர்­மை­யா­ன­தாக இருக்கப் போவ­தில்லை. அதில் அமர்ந்­தாலே அதி­லி­ருக்­கின்ற கஷ்­டங்கள் தெரியும்.

எனவே ஆட்­சியை திறம்­பட கொண்டு நடத்தக் கூடி­ய­வ­ரா­கவும் பெரும்­பான்மை சிறு­பான்மை மக்­களின் ஆத­ரவை ஒருங்கே பெற்­ற­வ­ரா­கவும் அவர் இருப்­பது அவ­சியம். அமைச்­ச­ராக நிய­மிக்கக் கூடிய ஒரு­வரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்­மொ­ழி­வது சொந்த செலவில் சூனியம் வைப்­ப­தற்கு ஒப்­பா­னது எனலாம்.

அந்த வகையில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க போன்ற ஓரி­ரு­வரே முஸ்­லிம்­களின் நம்­பிக்­கையை ஓர­ள­வுக்கு பெற்­றுள்­ள­வ­ரா­கவும் சவால்­மிக்க ஒரு வேட்­பா­ள­ரா­கவும் இருப்பர் என்ற அபிப்­பி­ராயம் பர­வ­லாக உள்­ளது. இருந்­தாலும் அவ்­வா­றா­ன­வர்கள் கள­மி­றங்­கு­வார்­களா என்­பது இன்னும் உறு­தி­யா­க­வில்லை.

இவ்­வாறு. எதி­ர­ணியின் வேட்­பாளர் யாரென்று தெரி­யாமல் இருக்­கின்ற ஒரு பின்­பு­லத்தில் பெயர் தெரி­யாத அவ் வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக அறி­விக்க முடி­யாது என்ற நிலைப்­பாட்­டி­லேயே…. தோற்­க­டிக்க முடி­யாத ஜனா­தி­ப­தியின் பக்கம் முஸ்லிம் கட்­சிகள் இலே­சாக சாய்ந்­தி­ருக்­கின்­றன.

முஸ்­லிம்­களின் அர­சி­யலை பெரு­ம­ள­வுக்கு பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்­சிகள் நிகழ்­கா­லத்தில் அர­சாங்­கத்­துடன் தேனி­லவு கொண்­டாடிக் கொண்­டி­ருக்­கின்­றன – அவ்­வப்­போது சிறு ஊடல்கள் ஏற்­பட்­டாலும் கூட !

ஆனால், ஒரு கட்சி என்ற அடிப்­ப­டையில் இந்த சமூ­கத்­திற்கு எத்­தனை உரி­மை­க­ளையும் அபி­வி­ருத்­தி­க­ளையும் இந்த தலை­வர்கள் பெற்றுக் கொடுத்­துள்­ளனர் என்ற கேள்­விக்கு இன்னும் விடை­யில்லை. அமைச்­ச­ராக இருப்­பதால் கிடைக்­கின்ற அபி­வி­ருத்­தியும் சில தொழில் வழங்­கு­தல்­களும் கட்சி பெற்றுக் கொடுத்­த­தாக கரு­தப்­பட முடி­யாது.

இம்­மூன்று கட்சித் தலை­வர்­க­ளிலும் அமைச்சர் அதா­வுல்லா தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் ஆளும் கட்­சிக்கே ஆத­ர­வ­ளிக்கும். இந்த நிலைப்­பாட்டில் இருந்து தலைவர் விலகப் போவ­தில்லை. அத்­துடன் அந்த முடிவை ஆட்­சே­பிக்கும் அள­வுக்கு கட்­சிக்குள் ஆட்­களும் இல்லை.

அமைச்சர் றிசாட் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்கடந்த ஊவா மாகாண சபை தேர்­தலில் மு.கா.வுடன் இணைந்து போட்­டி­யிட்டு அர­சுக்கு எதி­ரான சக்தி என்ற போலி­யான விம்­பத்தை தோற்­று­வித்­தது. இந்­நி­லையில் எதிர்­வரும் தேர்­தலில் தலையைச் சுற்றி மூக்­கைத்­தொட்ட கதை­யாக சில விமர்­ச­னங்கள் மற்றும் வியா­கிக்­யா­னக­ளுடன் ஆளும் தரப்­பிற்கு ஆத­ர­வ­ளிப்­பதே நடை­முறைச் சாத்­தி­ய­மாகும்.

மறு­பு­றத்தில். முஸ்லிம் சமூ­கத்தின் ஏக பிர­தி­நி­திகள் என்று தமது வகி­பா­கத்தை பெருப்­பித்துக் காட்டும் முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி ஒரு­மித்த நிலைப்­பாட்­டுக்கு வரு­வதில் பல்­வேறு சர்ச்­சைகள் எழுந்­துள்­ளன. இந்தக் கட்சி ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வையோ அல்­லது பொது வேட்­பா­ள­ரையோ – யாரை ஆத­ரிக்க முடி­வெ­டுத்­தாலும் கட்­சிக்குள் இருக்­கின்ற பலரை சமா­ளிக்க வேண்­டி­யி­ருக்கும். இது ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்குள் இல்­லாத ஒரு நிலை­மை­யாகும்.

கூட்­டங்­களின் கூத்து

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அண்­மையில் கொழும்பில் உயர்­பீடக் கூட்­டத்­தையும் அம்­பா­றையில் செயற்­குழு கூட்­டத்­தையும் நடத்­தி­யது. இவ்­விரு கூட்­டங்­களும் ‘சுபம்’ இன்­றியே முடி­வ­டைந்­தது மட்­டு­மன்றி, இக்­கூட்­டங்­களில் இடம்­பெற்ற வாக்­கு­வா­தங்கள் குறித்த தக­வல்­களும் கசிந்­தி­ருக்­கின்­றன.

உயர்­பீட கூட்­டத்தில் பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தினர். கட்சித் தலைவர் ஒப்­பீட்­ட­ளவில் ஜனா­தி­பதி மஹிந்­த­வுக்கு சார்­பான நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தினார் என்­ற­போ­திலும், மக்­களின் கருத்­த­றிந்து தீர்­மானம் எடுப்போம் என்று கூறி­யுள்ளார்.

அப்­போது குறுக்­கிட்ட மாகாண சபை உறுப்­பினர் ஒருவர் “மக்­களின் கருத்­த­றிய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நாம் எடுக்கும் தீர்­மா­னமே போது­மா­னது” என்ற தொனியில் கருத்து வெளி­யிட்­டுள்ளார். அவ­ருக்கு துணை­யாக இன்­னு­மொரு உறுப்­பி­னரும் பேசி­யுள்ளார். இதனால் ஆத்­தி­ர­முற்ற ஏனைய உறுப்­பி­னர்கள் சத்­தம்­போட்டு அவ்­வி­ரு­வ­ரையும் பேச­வி­டாது அமரச் செய்­த­தாக நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்­களில் இருந்து அறியவ­ரு­கின்­றது.

அர­சாங்­கத்­திற்கோ பொது வேட்­பா­ள­ருக்கோ ஆத­ர­வ­ளிப்­பது வேறு விடயம். அதற்கு சார்­பாக கருத்­துக்­கூ­றவும் அவர்­க­ளுக்கு உரி­மை­யுள்­ளது. ஆனால் மக்­களின் கருத்­த­றியத் தேவை­யில்லை என்று கூறு­வ­தற்­கான தார்­மீக உரிமை அவர்­க­ளுக்கு கிடை­யவே கிடை­யாது.

இது மக்­களின் கட்சி. மக்­களின் விருப்­பத்­திற்கு முன்­னு­ரிமை வழங்கி தீர்­மானம் எடுப்போம் என்று கூறு­கின்ற மு.கா. கட்­சிக்குள் தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­பட நினைப்­போரும் இருக்­கின்­றனர் என்­ப­தற்கு இந்த உயர்­பீட சம்­பவம் (உண்­மை­யென்றால்) நல்­ல­தொரு சான்­றாகும். எது எப்­ப­டியோ நிலைமை கட்­டுக்­க­டங்­காது சென்­றதால் அம்­பா­றையில் செயற்­கு­ழுவை சந்­திப்­பது என்ற தீர்­மா­னத்­தோடு கூட்டம் முடி­வுக்கு வந்­தது.

அட்­டா­ளைச்­சே­னையில் நடந்­தே­றிய செயற்­குழு கூட்­டத்தில் கட்­சியின் செய­லாளர் கலந்து கொள்­ள­வில்லை. தனது குடும்ப உற­வி­னர்கள் கொழும்பு வீட்­டுக்கு வந்­தி­ருந்­த­மையால் வர முடி­ய­வில்லை என அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால், இக் கூட்­டமும் கொழும்பில் நடை­பெற்ற உயர்­பீட கூட்­டத்தின் போட்­டோ­பி­ர­தி­யா­கவே இருந்­தது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்­டோ­ரிடம் ஆரம்­பத்தில் தேர்தல் தொடர்­பாக கருத்துக் கேட்கப்­பட்­டது

பிர­தேச சபை உறுப்­பினர் ஒருவர் எழுந்து ஆளும் கட்­சியை ஆத­ரிப்­பதே நல்­ல­தென கூறிய போது சபையில் சல­ச­லப்பு ஏற்­பட்­டது. அதி­க­மானோர் அக்­க­ருத்தை எதிர்த்­தனர். அப்­போது ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மேற்­சொன்ன பிர­தேச சபை உறுப்­பி­னரின் கருத்துச் சுதந்­திரம் பற்றி அக்­க­றை­யுடன் பேசினார். அத­னை­ய­டுத்து மற்­று­மொரு மு.கா. எம்.பி. எழுந்து அர­சாங்கத்தை ஆத­ரிக்க முடி­யாது என்றும் மக்கள் தீர்­மா­னத்­திற்கு கட்­டுப்­ப­டு­வ­தா­கவும் கூறினார். இவர்கள் இரு­வ­ரதும் நிலைப்­பாடு தெட்­டத்­தெ­ளி­வாக பார்­வை­யா­ளர்­க­ளுக்கு புரிந்­தது.

எல்­லா­வற்­றையும் புதினம் பார்த்துக் கொண்­டி­ருந்த கட்­சித்­த­லைவர் பாம்­புக்கும் நோகாமல் கம்­புக்கும் நோகாமல் வழக்­கம்­போல பேசி கூட்­டத்தை முடித்தார். எல்லாம் சொல்லி வைத்­தாற்போல் இருந்தது. இது இவ்­வா­றி­ருக்க, கட்­சியின் ஆசிர்­வா­த­மின்றி அமைச்சுப் பத­வியைப் பெற்ற தவி­சாளர் சில தினங்­க­ளுக்கு முன்னர் ஒரு அறிக்­கையை விட்­டி­ருக்­கின்றார்.

“தற்­போ­தைய ஜனா­தி­ப­தியே வெற்றி பெறும் சாத்­தி­ய­மி­ருக்­கின்­றது. எனது கருத்­துக்கள் உயர்­பீ­டத்தில் ஏற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை. எவ்­வா­றி­ருப்­பினும் கட்­சியின் தீர்­மா­னத்­திற்கு கட்­டுப்­ப­டுவேன்” என்று அதில் குறிப்­பிட்­டுள்ளார். ஆக, முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சிக்குள் ஒரு­மித்த நிலைப்­பாடு கிடை­யாது.

முஸ்லிம் மக்­களின் விட­யத்தில் முஸ்லிம் கட்­சி­களில் ஒன்று தவிட்­டுக்கும் மற்­றை­யது தண்­ணீ­ருக்கும் இழுப்­பது வழ­மை­யா­கி­விட்­டது. இத­னா­லேயே இந்த சமூ­கத்தை ஒரு அங்­குலம் கூட முன்­ன­கர்த்த முடி­யாமல் இருக்­கின்­றது. இந்­நிலைமை மு.கா.வுக்கு உள்­ளேயும் காணப்­ப­டு­கின்­றது. அக்­கட்­சியில் உள்ள உறுப்­பி­னர்கள் தனித்­த­னியே சென்று அர­சுடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற கார­ணத்தை கூறி பல தட­வைகள் மக்கள் விரும்­பாத முடிவை மு.கா.

எடுத்­திருக்­கின்­றது. கடைசி வரையும் கொள்கைப் பிடிப்­புடன் இருக்கும் ஒரே­யொரு உறு ப்­பி­னரான செய­லாளர் ஹச­னலி எம்.பி. யும் தலை­வ­ருக்கு கட்­டுப்­ப­டு­வ­தாக முன்­னமே செய்­து­கொ­டுத்த சத்தியப்பிரமாணத்திற்கு அமை­வாக கடைசி நேரத்தில் தனது பிடியை தளர்த்­தி­ வி­டு­வ­துண்டு. அப்­ப­டி­யான ஒரு நிலை­மையே இந்த தேர்­த­லிலும் ஏற்­று­ப­டுமா என்ற சந்­தேகம் இன்று ஏற்­பட்­டுள்­ளது.

பிளவும் வீழ்ச்­சியும்

இவ்­வி­டத்தில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். கட்­சியில் இருந்து இரண்டு பேர் சென்று ஆளும் கட்­சியில் இணை­வதால் கட்­சியில் பிளவு ஏற்­ப­டலாம். ஆனால் அது கட்­சியின் வீழ்ச்­சி­யாக மாட்­டாது. ஆனால் மக்கள் விருப்­பத்­திற்கு மாறாக கட்சி செயற்­பட்டு மக்­களின் ஆத­ரவை இழப்­பதே உண்­மை­யான வீழ்ச்­சி­யாக இருக்கும்.

மு.கா. என்ற கட்­சியை தவிர்த்து தனித்­த­னி­யாக நோக்­கினால் எந்த மு.கா. எம்.பி.யும் சில ஆயிரம் வாக்­கு­களைக் கூட எடுக்­க­மாட்­டார்கள் என்­பது அர­சாங்­கத்­திற்கும் பொது எதி­ர­ணிக்கும் தெரிந்த சங்­க­தி­தான். ஒருவேளை, அதையும் தாண்டி கட்­சியில் இருந்து யாரா­வது வெளி­யே­றினால் அந்த ‘கறுப்பு ஆடு­களை’ சமூ­கத்­திற்கு பகி­ரங்­க­மாக தெரி­யப்­ப­டுத்­தி­விட்டு, மக்கள் ஆத­ரவின் மூலம் கட்­சியை முன்­கொண்டு செல்ல துணிவதை தவிர இப்­போது வேறு தெரி­வுகள் இல்லை.

இதற்­கி­டையில், மு.கா. செய­லாளர், அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்­தவை சந்­தித்­த­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. இருப்­பினும் இதன் உண்­மைத்­தன்மை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக செய­லாளர் எம்.ரி. ஹச­னலி எம்.பி.யை நேற்று நான் தொடர்­பு­கொண்ட போது, நடந்­த­வற்றை விப­ரித்தார்.

“சந்­திப்பு இடம்­பெற்­றது உண்­மைதான். நானும் எம்.பி.க்களான முத்­தலிப் பாறூக், தௌபீக் ஆகி­யோரே அமைச்சர் சுசிலை சந்­தித்தோம். கிழக்கு மாகாண சபையில் அர­சாங்­கத்திற்கு எதி­ரான கருத்­துக்­களை கூறியே நாம் வாக்­கு­களை பெற்றுக் கொண்டோம். அந்த வாக்­கு­களை அர­சாங்­கத்­திடம் அட­மானம் வைத்தோம்.

எதிர்க்­கட்­சி­யினால் அன்றி, அர­சாங்­கத்­தா லேயே இந்த மக்­க­ளுக்கு ஏதா­வது நடக்கும் என்­ப­தற்­கா­கவே அப்­படிச் செய்தோம். ஆனால், அர­சாங்கம் எமக்­க­ளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. இனப்பிரச்சினைக்­கான தீர்வு விட­யத்தில் தவிர்க்க முடி­யாத ஒரு அங்­க­மாக முஸ்­லிம்கள் இருக்­கின்­ற­போதும், முஸ்லிம் காங்­கி­ரஸை தெரி­வுக்­கு­ழுவில் உள்­ள­டக்­க­வில்லை என்­பது மன உளைச்­ச­லாக இருக்கின்றது” என்று தெரி­வித்தோம்.

“அத்­துடன் இந்த தேர்­தலில் ஆத­ரவு வழங்­கு­வது என்றால் பல விடயங்களை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று கோரினேன். குறிப்பாக கரையோர மாவட்டம் பற்றி பிரஸ்தாபித்தேன். அதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் அதனை உடனே செய்ய முடியாது. எல்லை நிர்ணயம் மேற்கொண்ட பின்னரே அதனை செய்ய முடியும் என்றார்.

ஆனால் எல்லை நிர்ணயம் அவசியமில்லை என்று வலியுறுத்தினேன். எமது கோரிக்கைகளை செவிமடுத்தஅமைச்சர் பிரேம் ஜயந்த, ஆளும் கட்சி உயர்மட்டத்தினரிடம் கதைத்து விட்டு மீண்டும் எம்மை சந்திப்பதாக கூறிச்சென்றார். இதற்கப்பால் வேறெந்த விடயமும்அங்கு பேசப்படவில்லை என்றார்” தெளிவாக.

இந்த தெளிவும் உறுதிப்பாடும் என்றென்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்றுதான் மக்கள் நினைக்கின்றனர். ஆனால் முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமை இல்லாது போனதுபோல, மு.கா. கட்சிக்குள்ளேயும் கட்டுப்பாடு சீர்குலைந்து போனதாலும் ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியேதிரைமறைவுபேரம்பேசல்களை நடத்திக்கொண்டிருப்பதாலும் முஸ்லிம்சமூகம் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளமுடியாதிருக்கின்றது.

எது எப்படியோ, ஜனாதிபதியையோ அல்லது பொது வேட்பாளரையோ யாரை ஆதரிப்பது என்றாலும் அந்நபர் முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளை நிஜமாக நிறைவேற்றுபவராக இருக்க வேண்டும். வெற்று வாக்குறுதிகளை கூறி சிலிர்க்க வைப்பவராக இருக்கக் கூடாது.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக முஸ்லிம் கட்சிகள் செயற்பட்டால், அவர்களுக்கு வாக்களித்ததன் மூலம் தாம் விட்ட பிழையை சுரணையுள்ள மக்கள் அடுத்த தேர்தலில் திருத்தி எழுதுவார்கள்.

ஏ.எல். நிப்றாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாலக்க சில்வாவின் நண்பர்கள் நால்வர் கைது!!
Next post நடிகை மீது கோபமாக இருக்கும் நடிகை!!