ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் 19ம் திகதி வெளியாகும்?

Read Time:1 Minute, 23 Second

102650036310350344270-Lஜனாதிபதி தேர்தல் திகதி குறித்த எதிர்வரும் 19ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை விடுக்கவுள்ளார்.

பின்னர் தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் நடைபெறும் திகதியை அறிவித்தவுடன் 45 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தின் நான்காவது வருடத்தை பூர்த்தி செய்கின்றார்.

இலங்கையில் ஜனாதிபதி ஒருவரின் பதவிகாலம் 6 வருடங்கள் என்றபோதும் அதில் நான்கு வருடங்களை பூர்த்தி செய்த பின் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாப்பரசரின் விஜயத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதிர்கட்சிகளின் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்து ஒத்திவைப்பு!!
Next post வெடிபொருள் ஆயுதங்கள் குறித்து இலங்கையிடம் அனுபவம் பகிரலாம்!!