ஒழுக்கத்தை குலைக்கும் முத்தப்போராட்டம்: முளையிலேயே கிள்ளி எறிந்து கலாச்சாரம் காக்கப்படுமா?

Read Time:7 Minute, 24 Second

3667baad-b736-468d-b0f9-742654561955_S_secvpfகொடுப்பதிலும் இன்பம். வாங்குவதிலும் இன்பம். தாய் குழந்தையை வாரி அணைத்து கொடுப்பது அன்பு முத்தம். இந்த உலகில் இதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

அதே நேரத்தில் வாஞ்சையோடு கட்டித் தழுவி, உச்சி முகர்ந்து முத்தம் கொடுப்பவர்களும் உண்டு. வயதில் பெரியவர்கள், தங்களை விட குறைந்த வயதுடையவர்களுக்கு இது மாதிரியான முத்தம் கொடுப்பது ஆசிர்வாதமாக பார்க்கப்படுகிறது.

எல்லோருமே குழந்தைப்பருவத்தில் இந்த முத்தக்கடலை நீந்தித்தான் பெரியவர்களாகி இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையல்ல.

குழந்தைகளை தூக்கிக் கொஞ்சுபவர்களில் பெரும்பாலோனோர் முத்தம் கொடுக்க மறப்பதில்லை. இந்த முத்தத்தை எந்த பெற்றோரும் மறுப்பதும் இல்லை. இப்படி முத்தத்தின் மொத்த கதைகளையும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்…

அன்பின்… பாசத்தின்… ஆசிர்வாதத்தின் வெளிப்பாடாக பார்க்கப்படும் இந்த முத்தம் இன்று…. இளசுகளின் பிடியில் சிக்கி தவிக்கிறது.

ஒரு காலத்தில் காதலையும், காதலிப்பவர்களையும் வெகு தூரத்தில் தள்ளி வைத்தே பார்த்து வந்தது நம் சமூகம்.

ஆனால் இன்று….. நிலைமை மாறிப்போய் விட்டது. காதலில் கட்டுண்டு கிடக்கும் தங்கள் பிள்ளைகளை, பெற்றோர்களே கண்டு கொள்வதில்லை. கடற்கரைகளிலும், பூங்காக்களிலும், மெய் மறந்து கிடக்கும் காதல் ஜோடிகளே இதற்கு உதாரணமாகும். குறிப்பாக மெரினா கடற்கரையில் சூடு பறக்கும் மணல் பரப்பில் சுகமாக காதலிக்கும் இளம் காதலர்கள் பலர், 4 சுவர்களுக்கு மத்தியில் இருப்பது போல எண்ணிக்கொண்டு என்னவெல்லாமோ செய்கிறார்கள்.

மெரினா கடற்கரை மட்டுமின்றி… பொது இடங்கள் அனைத்திலுமே காதல் போர்வையில் இளம் ஜோடிகள் பலர், எல்லை மீறுவது இன்று வழக்கமான ஒன்றாகி போனது.

இது போன்ற நேரங்களில் கையும் களவுமாக சிக்கும் காதலர்கள் பலரை போலீசார் எச்சரித்து அனுப்புவார்கள். அப்போது அவர்களின் பெற்றோரிடமும் போனில் தகவல் சொல்லி அறிவுரை கூறச்சொல்வார்கள். இப்படி பேசும் போலீசாரிடம் பல நேரங்களில் எதிர்முனையில் பேசும் பெற்றோர் இப்படித்தான் கூறுகிறார்கள்.

‘‘ஏன் சார்.. அவங்களை டிஸ்டர்ப் பண்றீங்க… 2 பேரும் லவ்வர் சார்… கல்யாணம் பண்ணிக்க போறாங்க… விட்ருங்க சார்’’ என்பது போன்ற வார்த்தைகள் இன்றைய பெற்றோரிடமிருந்து வாய் கூசாமலேயே வந்து விடுகின்றன. காலமும்… கலாச்சாரமும் அப்படி மாறி விட்டது.

இப்படி பொது இடத்தில் காதல் செய்பவர்களுக்கு எதிராக பல்வேறு அமைப்பினரும், போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக காதலர்கள் அதிகம் கூடும் நட்சத்திர ஓட்டல்கள், ‘பப்’புகள் என்று அழைக்கப்படும் நடன விடுதிகள் ஆகியவற்றில் பலமுறை தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன. பெங்களூரில் சமீபத்தில் இது போன்ற நடைபெற்ற ஒரு தாக்குதல் சம்பவம் வீடியோ காட்சிகளாகவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது மாதிரியான போராட்டங்கள் பிப்ரவரி 14–ந்தேதியான காதலர் தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சூட்டை கிளப்பிக்கொண்டே இருக்கிறது. பொது இடத்தில் எல்லை மீறும் காதலர்களுக்கு பல அமைப்பினர் திருமணம் செய்து வைத்த சம்பவங்கள் கூட நடைபெற்றுள்ளன.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இளம்பெண்கள் சிலரும், இளைஞர்களும், முத்த மழை பொழிந்ததை அம்மாநிலத்தில் சில அமைப்பினர் கண்டித்ததுடன் அவர்களை விரட்டியும் அடித்தனர்.

இந்த விவகாரம்தான் தற்போது முத்தத்துக்கு எதிராக எதிர்ப்பலைகளையும், ஆதரவாக முத்த போராட்டத்தையும் தீவிரமாக்கியுள்ளது.

பொது இடத்தில் முத்தம் கொடுப்பது என்பது எங்களின் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றதாக உள்ளது என கூறி கேரள மாநிலத்தில் மாணவ – மாணவிகள் பொது இடங்களில் ஒன்றாக கூடி முத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களிலும் இந்த போராட்டம் பரவ தொடங்கியுள்ளது.

குறிப்பாக சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர்கள் ஒன்றாக கூடி ‘இருக்கி அணைச்சி உம்மா’ கொடுத்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகரீகம் என்ற பெயரில் தமிழ் கலாச்சாரமும், நாம் கடைபிடித்து வந்த மரபுகளும், கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போய் கொண்டிருக்கின்றன.

உடையில் தொடங்கி.. உணவு வரை அத்தனையும் மாறிப்போய் விட்டது. பாவாடை தாவணியில் இன்றைய இளம்பெண்களை கிராமப்புறங்களில் கூட பார்ப்பது அரிதாகிப்போனது.

இப்படி காலத்துக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொண்ட நாங்கள் இதையும் செய்வோம்… இன்னமும் செய்வோம் என்பது போல முத்த போராட்டங்களில் ஈடுபட தொடங்கி இருப்பது நமது கலாச்சாரத்துக்கு நாமே வைக்கும் வேட்டாகவே பார்க்கப்படுகிறது. அது வெடித்து சிதறும் முன்னர் விழித்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

இது போன்ற முத்த போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய கலாச்சார காவலர்கள் முன்வர வேண்டும்.

அப்போதுதான்…

‘‘பெண்மை காக்கப்படும்… கலாச்சாரம் பேணப்படும்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னையில் நள்ளிரவில் வாலிபர்களை தாக்கி 8 சவரன் நகை பறிப்பு!!
Next post மத்திய பிரதேசத்தில் 5 சிறுமிகள் மாயம்: கடத்தப்பட்டார்களா?