குஷ்புவை அறிமுகப்படுத்திய காலமானார்!!

Read Time:4 Minute, 20 Second

hushbooமகாபாரதம் தொடரை தயாரித்த டைரக்டர் ரவி சோப்ரா மரணம் அடைந்தார். இவர் குஷ்புவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்திப்பட உலகில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக விளங்கியவர் ரவிசோப்ரா. இவர் பிரபல இயக்குனர் பி.ஆர்.சோப்ராவின் மகன் ஆவார்.

தந்தையுடன் ஏராளமான படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார். நாட்டில் தூர்தர்ஷன் அறிமுகமாகி அதன் தாக்கம் உச்ச கட்டத்தில் இருந்த போது மகாபாரதம் கதையை டி.வி. சீரியலாக தயாரித்து இயக்கி ஒளிபரப்பினார். இந்த தொடர் 1988–ம் ஆண்டு முதல் 1990–ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஒளிபரப்பாகி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. டப்பிங் செய்யப்படாத அந்த கால கட்டத்தில் இந்தியில் மகாபாரதம் அனைத்து மொழி பேசும் மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இயக்கி இருந்தார்.

2006–ம் ஆண்டு தந்தை பி.ஆர்.சோப்ரா மரணம் அடைந்த பின்பு ரவிசோப்ரா மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி பல படங்களை இயக்கினார். ரவிசோப்ரா கடந்த 2012–ம் ஆண்டு முதல் நுரையீரல் நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு பல தடவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

68 வயதான ரவிசோப்ராவுக்கு நுரையீரலில் புற்று நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மும்பை திரும்பினார். அதன் பிறகு மீண்டும் மும்பை பிரீச் கேண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். அவரது உடல் தகனம் மும்பையில் நேற்று நடந்தது.

இதில் மும்பை பட உலக பிரபலங்கள் பங்கேற்றனர். ரவிசோப்ரா இயக்கிய படங்களில் ஜமீர், திபர்னிங் டிரெய்ன், ஆஜ்சி ஆவாஸ், மஸ்தூர், தரீஸ், பக்பான், பாபுல் ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும். ஜமீர் படத்தில் அமிதாப் பச்சன் நடித்து இருந்தார்.

1980–ல் ‘தி பர்னிங் டிரெய்ன்’ படம் வெளியாகி இந்தியில் சக்கை போடு போட்டது. ஆங்கிலத்தில் வெளியான புல்லட் டிரெய்னுக்கு இணையாக இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. தர்மேந்திரா, வினோத் கன்னா, ஜிதேந்திரா, வினோத் மேக்ரா, நசீர் உசேன், பர்வீன்பாபி, ஹேமமாலினி, சிமி கரேவால், நீத்துசிங் என பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து இருந்தது.

அதுவரை குழந்தை நட்சத்திரமாக இருந்த குஷ்பு தனது 10 வயதில் ‘தி பர்னிங் டிரெய்ன்’ படத்தில் நடிகையாக அறிமுகமான அவருக்கு இதில் மாணவி வேடம் சக மாணவிகளுடன் சுற்றுலா செல்வதற்காக ரெயிலில் பயணம் செய்வார். அந்த ரெயிலில் தான் குண்டு வைக்கப்பட்டு இருக்கும். அவர்களை தர்மேந்திரா குழு மீட்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

குஷ்புவுக்கு இதில் பாடல்காட்சியும் உண்டு. ரெயிலில் மகிழ்ச்சியுடன் மாணவிகளுடன் ‘தேரி ஹெய் ஜமீன் தேரா ஆஸ்மான்’ என்ற பாடலை பாடுவது போல் படத்தில் காட்சி இடம் பெற்று இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செய்யாறில் 2 மாணவிகள்-இளம்பெண் மாயம்!!
Next post முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்!!