கோழிக்கோட்டில் 7–ந்தேதி மீண்டும் முத்தப் போராட்டம்!!

Read Time:3 Minute, 18 Second

4ab271db-10b9-4fc3-b577-03c9a851c45d_S_secvpfகேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த ஆடல் பாடல் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களும், இளம்பெண்களும் அத்து மீறிய செயலில் ஈடுபட்டதாகக் கூறி பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவை சேர்ந்தவர்கள் அந்த ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடினார்கள்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாரதீய ஜனதா கட்சியினரின் தாக்குதலை கண்டித்து ‘கிஸ் ஆப் லவ்’ என்ற அமைப்பு இணையதளத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு அதிக ஆதரவு கிடைத்தது. மேலும் அந்த அமைப்பினர் பொது இடத்தில் கூடி ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி கடந்த 2–ந்தேதி கொச்சி மரையன் டிரைவ் மைதானத்தில் திரண்ட முத்தப் போராட்டக்காரர்கள் நடுரோட்டில் முத்தமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டு போலீஸ் தடியடியில் முடிவடைந்தது.

கொச்சியில் நடந்த முத்த போராட்டம் நாடு முழுவதிலும் இருந்து மாணவ–மாணவிகளிடம் ஆதரவை பெற்றது. டெல்லி, ஐதராபாத், கொல்கத்தாவிலும் மாணவ–மாணவிகள் முத்தப்போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் ‘கிஸ் ஆப் லவ்’ அமைப்பினர் தங்கள் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அடுத்த கட்ட போராட்டத்திற்கு ‘கிஸ் ஆப் தி ஸ்ட்ரீட்’ என்று புதிய பெயரிட்டுள்ளனர்.

இந்த முறை தங்கள் போராட்டக்களத்தை கோழிக்கோட்டிற்கு மாற்றி உள்ளனர். அடுத்த மாதம் (டிசம்பர்) 7–ந்தேதி இந்தப் போராட்டம் கோழிக்கோட்டில் நடைபெறும் என்று இந்த அமைப்பினர் ‘பேஸ்புக்’கில் அறிவித்துள்ளனர்.

கடந்த முறை கொச்சியில் நடந்த போராட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நடைபெற்றது. ஆனால் இந்த முறை கோழிக்கோடு நகரையே ஸ்தம்பிக்க செய்யும் வகையில் தங்கள் போராட்டத்தை அரங்கேற்ற அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கோழிக்கோடு நகரின் தெருக்கள் தோறும் திரண்டு நின்று ஒருவருக்கொருவர் முத்த மிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இவர்கள் போராட்டத்திற்கு இப்போதே ‘பேஸ்புக்’கில் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலவாயிலில் மூன்று கிலோ தங்கம் கடத்தி வந்த இருவருக்கு சிக்கல்!!
Next post செய்யாறில் 2 மாணவிகள்-இளம்பெண் மாயம்!!