2014ம் ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது!!
தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கிய இவர் தற்போது லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் அவரது பிறந்த நாளான 12-ந் திகதி ரிலீசாக இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 2014-ம் ஆண்டின் சிறந்த இந்திய திரையுலக பிரமுகராக ரஜினியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, இந்திய திரைப்பட நூற்றாண்டையொட்டி வழங்கப்படுகிறது.
கோவாவில் வரும் 20-ம் திகதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. 20-ம்தேதி நடைபெறும் துவக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இன்று அறிவித்தார். அமிதாப்பச்சன் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விழாவில், இந்தியா முழுவதிலும் இருந்து நடிகர்கள் மற்றும் நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் திரையுலகப்பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், முக்கியப்பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். 75 நாடுகளில் இருந்து 179 திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating