(VIDEO) உலக நாயகன் முன்பு ஆட சங்கடப்பட்டு, வெட்கப்பட்டு நெளிந்த விஜய்!!
உலக நாயகன் கமல் ஹாஸனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய், கமல் பாட்டுக்கு ஆடச் சொன்னபோது ரொம்பவே வெட்கப்பட்டு, சங்கோசப்பட்டு நெளிந்த வீடியோ காட்சி இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது. உலக நாயகன் கமல் ஹாஸன் கடந்த 7ம் தேதி தனது 60வது பிறந்நதாளை கொண்டாடினார்.
தூய்மை இந்தியா திட்டத்தை துவங்கி வைத்த அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி அளித்தார். பார்ட்டியில் அவர் கேக் வெட்டி அதை கௌதமிக்கும், அவரது மகளுக்கும் அளித்தார். பார்ட்டியில் கலந்து கொண்ட இளைய தளபதி விஜய் வழக்கம் போல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது இளமை இதோ இதோ பாடல் ஒலிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பாட்டுக்கு கமல் பழைய ஸ்டெப்ஸ்களை மறக்காமல் சட் சட்டென்று போட்டு அனைவரையும் கலகலக்க வைத்தார். கூடவே, அவர் விஜய்யின் கையை பிடித்து ஆடுமாறு கூறினார். ஆனால் விஜய்யோ வெட்கத்தில் சும்மா கையை மட்டும் ஆட்டினார். பாடலில் வரும் இளமை இதோ இதோ என்ற லைனுக்கு கமல், விஜய்யைப் பார்த்து விரலைக் காட்டி கலகலப்பை ஏற்படுத்தினார்.
அதேபோல காலேஜு டீன் ஏஜு பெண்கள் என்ற வரி வந்தபோது, அவர் ராதிகாவைக் கையைக் காட்டி கலகலப்பூட்டினார். ஆனால் அவர்களோ கமலைப் பார்த்து கையைக் காட்டி மேலும் கிளுகிளுப்பை ஏற்படுத்தினர். விஜய்யின் வெட்கத்தைப் பார்த்த ராதிகாவும் அவரது கையை பிடித்து ஆட வைக்க முயன்றார். ஆனாலும் விஜய் ஆடவில்லை. மாறாக லைட் லைட்டாக கையை, காலை மட்டும் ஆட்டினார்.
படங்களில் விஜய் சூப்பராக டான்ஸ் ஆடினாலும் பார்ட்டிகள் என்று வந்துவிட்டால் அவருக்கு ஏனோ வெட்கமாகிவிடுகிறது. விஜய் வெட்கத்தில் நெளியும் வீடியோவை யாரோ ஒரு பிரபலம் வெளியிட அது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating