தனது சகோதரரை கத்தியால்குத்தி கொலைசெய்த இலங்கைத் தமிழருக்கு எட்டுவருட சிறைத்தண்டனை –சுவிஸில் சம்பவம்

Read Time:2 Minute, 24 Second

swiss.jpg2004ம்ஆண்டு நவம்பர் மாதம் 21ம்திகதி அன்று நண்பர்கள் மற்றும் தனதுதம்பி ஆகியோருடன் கதைத்துக் கொண்டிருந்த போது அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து அண்ணனான செல்வநாயகம் ரவி என்பவர் தனதுதம்பியான 30வயதுடைய செல்வநாயகம் தர்மராஐhவை (அம்மாச்சி) கோபத்தில் கத்தியால் குத்தியதில் எதிர்பாராதவிதமாக தர்மராஐh அவ்விடத்திலேயே இறந்ததுடன் இக்கொலை தொடர்பாக தர்மராஐhவைக் கொலைசெய்த ரவியைக் கைதுசெய்து விசாரணை நடாத்திய சுவிஸ்பொலிசார் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு ரவிக்கு எட்டுவருட சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுவிஸ் பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸிலாந்தின் சூரிச் மாநிலத்தில் நீண்டகாலமாக வசித்துவந்த இலங்கைத் தமிழர்களான சகோதரர்கள் இருவரும் இலங்கையில் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களெனவும் மேற்படி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் இறுதியாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களாவெனக் கேட்டபோது ‘தான் திட்டமிட்டு இதைச்செய்யவில்லையெனவும் தனது மதுப்பழக்கத்தினாலேயே மேற்படி துர்ப்பாக்கியமான சம்பவம் நடைபெற்றதாகவும் தனக்கு மன்னிப்பு வழங்குமாறும்” ரவி தெரிவித்த போதும,; இதனை நிராகரித்த நீதிமன்றம் எதிர்பாராதவிதமாக இக்கொலை நடைபெற்ற போதிலும் கொலையை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்து எட்டுவருட சிறைத்தண்டனைத் தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளது. மேற்படி ரவி என்பவர் இருகுழந்தைகளுக்குத் தந்தையெனவும் தெரியவருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டோக்கியோவை முந்தியது மாஸ்கோ
Next post கற்பிட்டியில் கடற்படையினர் புலிகள் மோதல்