மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சு இருந்தும் டிரைவர் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் பரிதவிப்பு!!
திருக்கனூர் காலனியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 30). இவர் புதுவை காவல் துறையில் ஐ.ஆர்.பி.என். பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி (25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கயல்விழிக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து கயல்விழியை அவரது உறவினர்கள் மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துவந்தனர்.
அங்கு கயல்விழிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் நிறுத்தி இருந்த ஆம்புலன்சில் கயல்விழியை அழைத்து செல்ல அவரது உறவினர்கள் முயற்சித்தனர்.
ஆனால் டிரைவர் இல்லை. டாக்டர்களிடம் கேட்டபோது 2 டிரைவரில் ஒருவர் பணி ஓய்வு பெற்று விட்டதாகவும், அவருக்கு பதில் வேறு டிரைவர் நியமிக்கப்படாததால் ஒரு டிரைவர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், அதுவும் அந்த டிரைவர் பகல் ஷிப்டு வேலை செய்து விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கயல்விழியின் உறவினர்கள் தவித்தனர்.
இதற்கிடையே மண்ணாடிப்பட்டை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மனைவி புஷ்பா என்ற கர்ப்பிணி பெண்ணும் பிரசவ வலியால் ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆனால் 2 பெண்களையும் பிரசவத்துக்கு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லை. கர்ப்பிணி பெண்களின் வேதனையை அறிந்து டாக்டர்களும், காட்டேரிக் குப்பம் மற்றும் அரியூர் ஆகிய இடங்களுக்கு தகவல் தெரிவித்து 108 ஆம்புலன்சை அனுப்பி வைக்குமாறு கூறினர். ஆனால் டாக்டர்கள் தகவல் தெரிவித்து ஒரு மணி நேரமாகியும் 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. இதற்கிடையே பிரசவலியால் 2 கர்ப்பிணி பெண்களும் துடியாய் துடித்தனர்.
இதையடுத்து வேறுவழி இல்லாததால் 2 கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற அவசர அவசரமாக வாடகை காரை அமர்த்தி இருவரையும் புதுவைக்கு கொண்டு வந்தனர். கயல்விழி ஜிப்மர் ஆஸ்பத்தரியிலும், புஷ்பா ராஜீவ்காந்தி அரசு மகப்பேறு ஆஸ்பத்தரியிலும் சேர்க்கப்பட்டனர்.
அவசர தேவைக்காகவே கிராமபுறங்களில் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆம்புலன்ஸ் இருந்தும் டிரைவர் நியமிக்கப்படாமல் இருந்தால் ஆம்புலன்ஸ் எதற்காக என்று கிராமபுற மக்கள் கேள்வி விடுத்துள்ளனர். வாடகை கார் இல்லாமல் போனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களுக்கு பிறக்கபோகும் குழந்தைகளின் கதி என்னவாகி இருக்கும்? இதனை அரசு சிந்தித்து உடனடியாக ஆம்புலன்சுக்கு டிரைவரை நியமிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating