வீட்டுரிமையை பெற்றுத் தாருங்கள்! மலையகத்தில் அமைதிப் பேரணி!!

Read Time:2 Minute, 55 Second

1757165347Untitled-111மலையக மக்களுக்கு காணி, வீட்டுரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கோரி சிவில் அமைப்புகள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் இன்று (09) ஹட்டன் நகரில் அமைதிப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர்.

“இருநூறு வருட மலையக மக்களின் வரலாற்றினை கொஸ்லாந்தை அனர்த்தம் உலகுக்கு வெளிகாட்டிவிட்டது. இந்நிலை தொடருமானால் இன்னும் இருநூறு வருடங்களுக்கும் இவ் அவல நிலை தொடரதான் போகின்றது.

இதற்குநாம் இனியும் இடமளிக்க கூடாது. இதனைமாற்ற வேண்டிய தருவாயில் நாங்கள் இப்போது இருக்கின்றோம் என்பதை மலையக மக்கள் உணரவேண்டும். கொஸ்லாந்தை அனர்த்தத்தின் விளைவுகள் மலையக மக்கள் மனதில் உணர்ந்தால் ஒவ்வொருவரும் சிந்தித்து இனி ஏற்படவிருக்கின்ற அனர்த்தத்தினையும் இல்லாதொழித்து பாதுகாப்பான இடங்களில் சொந்தவீடு, சொந்தகாணி பெற்று கொள்வதற்காக ஒன்றினைந்து போராடவேண்டும்.

எமது மலையக அரசியல்வாதிகள் முன்னின்று எமது மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுக்க அரசியல் தொழிற்சங்கபேதமின்றி முன்வரவேண்டும்.

அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்க தீர்மானித்துள்ளனர். எனினும் தோட்ட தொழிலாளிகளுக்கு மட்டுமில்லாமல் தோட்ட தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கும் ஏனைய தனியார் துறையில் மற்றும் அரசதுறையில் பணிப்புரிபவர்களுக்கும் தோட்டத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும்.

லயன் குடியிருப்புகளுக்கு பதிலாக குறைந்தபட்சம் 20 பேர்ச் காணியூடனான தனிவீட்டு திட்டத்தை அமைக்க வேண்டும்” என இந்த பேரணியில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

20 பேர்ச் காணிகொடுப்பதற்கான இடங்கள் மலையகத்தில் அதிகளவாக காணப்படுகின்றது. அந்த இடங்களை இணங்கண்டு வழங்குவதற்கு மலையக அரசியல்வாதிகள் ஒன்றினைந்து முன்வரவேண்டும் என பேரணியில் ஈடுப்பட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!!
Next post இலங்கை அணி இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு!!