நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!

Read Time:2 Minute, 50 Second

c9e8f231-16f5-4287-b2e7-7fc5fb234291_S_secvpfகருங்கல் அருகே உள்ள மிடாலத்தை சேர்ந்தவர் மரியதாசன்(வயது 55). இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ரோசி(30, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

ரோசியின் கணவர் கேரளாவில் மீன்பிடி தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ரோசிக்கு மரியதாசன் தூரத்து உறவு முறை ஆவார். எனவே அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றபோது நெருங்கிய பழக்கமாகி கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஜோடி மாயமானது.

ரோசி மாயமானது பற்றி அவரது கணவர் கருங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்த போது கள்ளக்காதல் விவகாரத்தில் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் மரியதாசன் மட்டும் ஊருக்கு திரும்பினார். அவரிடம் உறவினர்கள் விசாரித்த போது ரோசி ராஜாவூரில் இருப்பதாக கூறினார். இதைக்கேட்டு ஆவேசமடைந்த உறவினர்கள் மரியதாசனை திட்டியதோடு, இது குறித்து போலீசாருக்கும் தகவல் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மரியதாசன் அங்கிருந்து மாயமானார். இதற்கிடையே ராஜாவூரில் இருக்கும் ரோசியை மீட்பதற்காக போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் மரியதாசன் அங்கு சென்று ரோசியை மீட்டு நாகர்கோவில் சென்ற தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.

போலீசார் இது குறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அவர்கள் நேற்று நள்ளிரவு அண்ணா பஸ் நிலையத்தில் வைத்து கள்ளக்காதல் ஜோடியை மடக்கிப்பிடித்தனர். இரவு நேரம் என்பதால் ரோசியை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தங்க வைத்தனர். இன்று இருவரும் கருங்கல் போலீசில் ஒப்படைக்கப்படு கின்றனர். கருங்கல் போலீசார் இருவரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோகடிக்கப்படும் நோபலின் நோக்கங்கள்… – கோவை நந்தன் (கட்டுரை)!!
Next post திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!!