தேனி அருகே புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை!!

Read Time:1 Minute, 52 Second

88fd0cb1-6e58-4f9e-915f-b689f43f991a_S_secvpfதேனி ஜி.எஸ்.டி. ரோடுபகுதியை சேர்ந்தவர் நாகராஜன். அவரது மகன் செந்தில்குமரன்(வயது 35). திருமணமான இவர் விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது இவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் (9–ந்தேதி) நடைபெற உள்ளது.

நேற்று இரவு வெளியே சென்ற செந்தில்குமரன் திடீரென மாயமானார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இன்று காலை தேனி அரசு ஆஸ்பத்திரி எதிரே ஒரு தனியார் ஓட்டல் பக்கத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அங்குள்ளவர்கள் கண்டமனூர் விலக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து பிணத்தை மீட்டனர். வாலிபரின் உடலில் பல்வேறு இடங்களில் கத்தி குத்தி காயம் இருந்தன. அதோடு முகம் பகுதி அரிவாளால் சிதைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து விசாரணையில் போலீசார் இறங்கினர். அப்போது பிணமாக கிடந்தவர் செந்தில்குமரன் என்பது தெரியவந்தது. இவரை யாரோ கொலை செய்து பிணத்தை வீசி சென்றுள்ளனர். செந்தில்குமரனை கொலை செய்த நபர்கள் யார்? எதற்காக இந்த கொடூர செயலை செய்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) திருமணத்துக்கு பின்னர் நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!
Next post தாயின் உணர்வுகளை குழந்தைக்கு அளிக்கும் திறன் தாய்ப்பாலுக்கு உண்டு: ஆய்வில் தகவல்…!!