மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் – நிபுணர்கள் தகவல்!!

Read Time:2 Minute, 31 Second

79874227-14dd-4640-b966-bcd85647ecb3_S_secvpfகர்ப்பமாக இருக்கும்போது மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ராயல் காலேஜ் ஆப் அப்ஸ்ட்ரீஷியன்ஸ் மற்றும் கைனகாலஜிஸ்ட்ஸ் நிபுணர்கள் இது குறித்து தெரிவிக்கையில், ’இளம்பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அரிது. ஆனால், இப்போது கர்ப்பமாக இருக்கும்போது மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்த பெண்கள் மற்றும் சிகிச்சைக்கு பின் கர்ப்பமாகும் பெண்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளது’ என தெரிவித்துள்ளனர்.

மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து தெரிவித்த அதிகாரி ஒருவர், ‘கர்ப்பமாக இருக்கும்போது மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது அரிது. கர்ப்பமாக இருக்கும்போது தனக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளதென ஒரு பெண்ணிற்கு தெரியவந்தால் அது பயத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முழு கவனம் செலுத்தும் வகையில், பிரத்யேகமான மருத்துவ உதவி அளிக்கப்பட்டு தாயும், சேயும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றனர் எனக் கூறினார்.

கர்ப்பமாக இருக்கும்போது மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முதல் 13 வாரங்களுக்கு கீமோதெரபி பரிந்துரைக்கப்படுவதில்லை எனவும், மார்பக புற்றுநோயிலிருந்து கர்ப்பிணிகளை மீட்கும் மருத்துவ சிகிச்சையின் வெற்றி விகிதம் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் இந்தியன் வீட்டுத் திட்டத்தின் உண்மை நிலை என்ன? பங்கீடுகள் எவ்வாறு உள்ளன?? -கழுகுப் பொறி!!
Next post தென்காசி அருகே அண்ணியை கற்பழித்த வாலிபர் கைது!!