காதலனுடன் சேர்ந்து 3 வயது குழந்தையை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்த தாய்!!

Read Time:1 Minute, 38 Second

87bbb017-d14f-4bf6-9978-b17c9a71f4f2_S_secvpfபிலடெல்பியாவில் 3 வயது குழந்தையை தாய் மற்றும் தாயின் காதலரும் சேர்ந்து கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிலடெல்பியாவில் வசித்து வரும் சிலியன் டேயிட் எனும் பெண் அவரின் காதலர் காரி லீ என்பவருடன் சேர்ந்து அவரது இளைய மகன் ஸ்காட் மேக்மில்லனை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்துள்ளார்.

ஸ்காட் மேக்மில்லனின் மூத்த அண்ணனையும் அவர்கள் அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, 3 வயது சிறுவனை தலைகீழாக தொங்கவிட்டு அடித்தது தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து தெரிவித்த வழக்கறிஞர் டாம் ஹோகன், ‘இது அந்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை. குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தாய் மற்றும் அவரது காதலன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் யாராவது வாதாடுகிறார்களா என்பது குறித்து தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராசியான ஜோடியாகிவிட்ட தீபிகா – ஷாரூக்!!
Next post நகையைத் திருடி கையும் களவுமான சிக்கிய கவர்ச்சி நடிகை!!