ஆசிரியையை காதலித்து ஏமாற்றிய பள்ளி முதல்வர் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

Read Time:3 Minute, 8 Second

2b137aa6-6431-478e-b637-5c085ea0cc24_S_secvpfவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் தனியார் பள்ளி உள்ளது. இதன் முதல்வராக கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த ராஜன் (38) என்பவர் உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் ஆலங்காயத்தில் தனி அறை எடுத்து தங்கி உள்ளார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதே பள்ளியில் துணை முதல்வராக அமுதா (30) வயது என்பவர் 2006 மே மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் பள்ளி முதல்வர் ராஜனும், அமுதாவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்

இதற்கிடையில் கடந்த 30ம் தேதி வால்பாறை சென்ற ராஜன் மீண்டும் பள்ளிக்கு வரவில்லை. இதற்கிடையில் வரும் 9ம் தேதி ராஜனுக்கும் வால்பாறையில் உள்ள ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக அமுதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வால்பாறையில் உள்ள ராஜனை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

இதுகுறித்து ஆலங்காயம் போலீசில் கடந்த 2ம் தேதி புகார் செய்தார். அதில் கடந்த 7 ஆண்டுகளாக ராஜன் என்னை காதலித்து விட்டு தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் வேதனையடைந்த அமுதா நேற்று முன்தினம் வீட்டில் அதிக மாத்திரையை தின்று மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அமுதாவை மீட்டு வாணியம் பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆலங்காயம் போலீசார் இது தொடர்பாக விசாரணையில் இறங்கினர். அதில் ராஜனுக்கு வருகிற 9ம் தேதி வால்பாறையில் திருமண ஏற்பாடு நடப்பது ஊர்ஜிதமானது. இதனையடுத்து போலீசார் வால்பாறைக்கு சென்றனர்.

பள்ளி முதல்வர் ராஜனின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இது பற்றி தகவலறிந்த பெண் வீட்டாரும் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வால்பாறை சென்ற போலீசார் ராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்காசி அருகே அண்ணியை கற்பழித்த வாலிபர் கைது!!
Next post கத்தியை காட்டி மிரட்டி போலீஸ்காரர் மனைவியிடம் நகை பறிப்பு!!