திருச்சி தனியார் கல்லூரியில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது வழக்கு!!

Read Time:2 Minute, 22 Second

d5d47ede-6686-465c-a3a3-2ee40dc0c05a_S_secvpfதிருச்சியில் தனியார் கல்லூரி மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மாணவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் பிரியா (வயது23 பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தற்போது திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து முடித்துள்ளார். இந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் அந்தோணிசக்தி (வயது 30).

இவர் மாணவி பிரியாவுக்கு அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தன்று மாணவிக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவி பிரியா சம்பவம் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிடம் புகார் அளித்துள்ளார்.

இதைதொடர்ந்து சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய கோட்டை அனைத்து மகளிர் போலீசார் உதவி பேராசிரியர் அந்தோணி சக்தி மீது மாணவி பிரியாவுக்கு முத்தம் கொடுக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

ஏற்கனவே இந்த கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஒருவர் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் மேலும் அதே கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் மாணவிக்கு முத்தம் கொடுக்க முயன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேலூர்: போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காதலனுடன் ஆசிரியை தஞ்சம்!!
Next post (PHOTOS) நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்..!!