மேலூர்: போலீஸ் நிலையத்தில் மணக்கோலத்தில் காதலனுடன் ஆசிரியை தஞ்சம்!!

Read Time:1 Minute, 29 Second

b21c244a-e916-418f-b53b-d6a922e55b48_S_secvpfமேலூர் அருகே ஒட்டக்கோவில்பட்டியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது23), பொக்லைன் ஆபரேட்டர். அதே ஊரைச் சேர்ந்தவர் அன்புமலர் (22), தனியார் பள்ளி ஆசிரியை.

உறவினர்களான இந்த 2 பேரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். அன்புமலரின் பெற்றோர், இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மேலூர் கோர்ட்டு அருகில் உள்ள கோவிலில் இன்று காலை காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணக்கோலத்தில் காதல் ஜோடி மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் எங்களை சேர்த்து வைக்கக்கோரி போலீசாரிடம் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் சாந்தி, இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தார். அன்பு மலரின் பெற்றோர் எதிர்ப்பில் உறுதியாக இருந்ததால் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.

இதையடுத்து காதல் ஜோடியினர் மேஜர் என்பதால் காதலனின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூட்டிய காருக்குள் மூச்சுத் திணறி 6 வயது சிறுவன் சாவு!!
Next post திருச்சி தனியார் கல்லூரியில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது வழக்கு!!