சிறுமிகளை விலைபேசி விற்கும் ஐ.எஸ்.!!

Read Time:1 Minute, 49 Second

163534541Untitled-1ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் தீவிரவாதிகள் சிறுமிகளை விலைபேசி விற்கும் அதிர்ச்சிக் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் சில பகுதிகளை கைப்பற்றி வைத்துள்ளனர். அங்குள்ள சின்சார் மலை பகுதியில் யாஷிடி என்ற பழங்குடி மதத்தினர் வசித்து வந்தனர்.

இந்த மலை பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள். அங்கு வசித்து வந்த யாஷிடி மக்களை இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தினார்கள்.

மதம் மாற மறுத்தவர்களை அவர்கள் கொலை செய்தனர். தற்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாஷிடியினர் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அவர்களில் பெண்களை தீவிரவாதிகள் சிலர் திருமணம் செய்திருக்கிறார்கள். மேலும் சிறுமிகளை அவர்கள் விலைபேசி விற்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள யாஷிடி சிறுமிகளை விலைபேசி விற்பது சம்மந்தமாக பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் நீல நிற கண்கள் உடைய அழகான சிறுமிகளை அதிக விலைக்கு பேரம் பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “புறுக்டோர்வ் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தில் வாழும்” புங்குடுதீவு மக்களுடனான கலந்துரையாடல்..!!
Next post ராசியான ஜோடியாகிவிட்ட தீபிகா – ஷாரூக்!!