ராசியான ஜோடியாகிவிட்ட தீபிகா – ஷாரூக்!!

Read Time:2 Minute, 37 Second

Untitled-121தீபிகா படுகோனே, ஷாருக்கானுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் ஓம் சாந்தி ஓம். இப்படம் பாலிவுட் வரலாற்றில் மறக்க முடியாத படமாக மாறியதுடன், பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் 80 கோடிகளை வசூலித்தது.

இந்த படத்தின் வெற்றி தீபிகாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. தொடர்ந்து அவரது வெற்றி பயணமும் தொடர்ந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் நடித்த லவ் ஆஜ் கல், பசானா ஏ ஹசீனோ, காக்டைல் உள்ளிட்ட படங்களும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்ததால் பாலிவுட்டின் ராசியான நடிகையாக தீபிகா உருவெடுத்தார்.

இந்நிலையில் முதல் படத்திலேயே பெரிய அளவில் வெற்றியை அள்ளிய தீபிகா, ஷாருக்கான் ஜோடி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தது.

இந்த படம் அனைத்து பாலிவுட் படங்களின் சாதனையையும் முறியடித்து பாக்ஸ் ஆபிசில் 200 கோடியை வசூலித்ததுடன்ல மெகா பிளாக்பஸ்டர் படமாக இருந்தது.

இந்த மெகா ஹிட் ஜோடி ஹேப்பி நியூ இயர் படத்தில் 3வது முறையாக ஜோடி சேர்ந்தது. இந்த படமும் பெரிய அளவில் ஹிட் ஆனது. மேலும் வௌியான மூன்றே நாட்களிலேயே 100 கோடியை சம்பாதித்த படம் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியது.

இதனால் ஹாட்ரிக் மெகா ஹிட் ஜோடி என்ற பெருமையை தீபிகா-ஷாருக் ஜோடி பெற்றுள்ளது.
ஷாருக்கானுடன் சேர்ந்து தீபிகா நடித்த இந்த 3 படங்களும் இரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றத்துடன், தீபிகாவின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த 3 படங்களிலும் தீபிகாவின் கேரக்டர் மறக்க முடியாததாகி விட்டது. இந்த 3 படங்களில் ஓம் சாந்தி ஓம் படமும், ஹேப்பி நியூ இயர் படமும் தீபாவளிக்கு வௌியானவை. இதனால் தீபாவளி பண்டிகை, தீபிகாவிற்கு மறக்கமுடியாத பண்டிகையாகி விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிகளை விலைபேசி விற்கும் ஐ.எஸ்.!!
Next post காதலனுடன் சேர்ந்து 3 வயது குழந்தையை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்த தாய்!!