இந்தியாவுக்கு இலக்கு 275!!

Read Time:1 Minute, 49 Second

107337856Untitled-1இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 275 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ள நிலையில் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

இதன்படி துடுப்புடன் களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்ப வீரர்களான குசல் பெரேரா (0), திலஹரத்ன டில்ஷான் (35) ஆகியோர் கைகொடுக்காத போதும், மெத்தியூஸ் மற்றும் சங்கக்கார வலுசேர்ந்தனர்.

குமார் சங்கக்கார இன்றைய போட்டியில் தனது 87வது அரைச்சதத்தைப் பதிவு செய்ததோடு உமேஷ் யாதவின் பந்துவீச்சில் 61 ஒட்டங்களைப் பெற்ற நிலையில் வௌியேறினார்.

எனினும் இறுதி வரை களத்தில் இருந்த அஞ்சலோ மெத்தியூஸ் அதிரடியாக ஆடி 92 ஓட்டங்களை விளாசினார்.

50 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை 274 ஓட்டங்களை குவித்துள்ளது.

இதன்படி 275 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி அடுத்ததாக களமிறங்கவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 50 அடி மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம்!!
Next post குழந்தை திருமணம் குறித்து நியூயார்க்கில் உரையாற்றவிருக்கும் சைக்கிள் மெக்கானிக்கின் மகள்!!