இலங்கை ஜனாதிபதி, சு.சாமிக்கு எதிராக இலங்கை அகதிகள் போராட்டம்!!

Read Time:1 Minute, 55 Second

1773362190Untitled-1தமிழகத்தின் – புதுக்கோட்டை – தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுப்பிரமணிய சாமி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளன.

2011ம் ஆண்டு தங்கச்சிமடம் பகுதியில் இருந்து திசை தெரியாமல் போன ஐந்து மீனவர்களை இலங்கையில் உள்ள நெடுந்தீவு கடற்கரை பகுதியில் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

அதன்பிறகு அண்மையில் அவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவித்தனர்.

இது தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியது.

பஸ் எரிப்பு மறியல் போன்ற பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுப்பட்டனர் .

அதுப்போல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி சொன்ன கருத்தும் உலகமெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ் மக்களிடம் பெரும் கோபத்தை உண்டாக்கியது.

இதனால் இருவரதும் உருவபொம்மைகளை தோப்புக்கொல்லை முகாமைச் சேர்ந்த, கனேஷ் தலைமையிலும், அல்போன்ஸ் ராஜா முன்னிலையிலும் முகாமில் உள்ள 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று காலை 8.30 அளவில் ஓன்று திரண்டு எரித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள் கைப்பந்து போட்டியைப் பார்க்கச் சென்ற பெண் சிறையில்!!
Next post 50 அடி மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம்!!