சரிதா நாயரின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த 28 ஆயிரம் பேரின் செல்போன்கள் கண்காணிப்பு!!

Read Time:2 Minute, 2 Second

bf8cc4e8-d711-4c02-b951-9bf0f22b41ff_S_secvpfகேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் சரிதா நாயர்.

இவரது ஆபாச படங்கள் சமீபத்தில் வாட்ஸ் அப் மற்றும் இணைய தளங்களில் வெளியானது. இதுபற்றி சரிதாநாயர் போலீசில் புகார் செய்ததோடு கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சரிதாநாயரின் வழக்கை விசாரித்த போலீஸ்காரர் ஒருவர் ஆபாச படங்களை வெளியிட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் செல்போனில் பரவிய சரிதாநாயரின் ஆபாச படங்கள் சுமார் 28 ஆயிரம் பேரின் செல்போன்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த செல்போன் எண்களின் செயல்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இதுபற்றி சரிதாநாயர் கூறியதாவது:–

எனது ஆபாச படங்கள் வெளியானதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. முதல்–மந்திரி மற்றும் சில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றம் சாட்டி அறிக்கை வெளியிடவும், பேட்டி கொடுக்கவும் சிலர் என்னை வற்புறுத்தினர். அதற்கு நான் மறுத்ததால் அவர்கள் எனது ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி வந்தனர்.

சவூதி அரேபியா, ஓமன், துபாய் நாடுகளில் இருந்து இந்த மிரட்டல் வந்தது. அங்கிருந்து பேசியவர்கள் மலையாளத்தில்தான் மிரட்டல் விடுத்தனர். இதன் மூலம் என்னை தற்கொலைக்கு தூண்டுவதே அவர்களின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டிவனத்தில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!!
Next post கொள்ளையடித்த போது பெண்ணை பலாத்காரம் செய்தோம்: பெங்களூர் சம்பவத்தில் கைதானவர்கள் வாக்குமூலம்!!