கொள்ளையடித்த போது பெண்ணை பலாத்காரம் செய்தோம்: பெங்களூர் சம்பவத்தில் கைதானவர்கள் வாக்குமூலம்!!

Read Time:1 Minute, 56 Second

87da19bc-52f6-4c61-b752-eb8550ffa6d3_S_secvpfபெங்களூருவில் ஒரு வீட்டில் கொள்ளை அடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நான்கு பேர், தாங்கள் கொள்ளை அடித்த போது, அந்த வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாக காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள வீட்டின் கதவை இரவு நேரத்தில் தட்டிய நான்கு பேர் கொண்ட கும்பல், தங்களை காவல் துறையினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, வீட்டில் போதை பொருள் உள்ளதாக தகவல் கிடைத்தது என மிரட்டி வீட்டினுள் நுழைந்துள்ளனர்.

அதன்பின் கத்தியை காட்டி வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளை அடித்த அக்கும்பல், வீட்டில் இருந்த கணவர், மாமியாரை கட்டிப்போட்டுவிட்டு, மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும் தெரியவந்துள்ளது. மறுநாள் காலை அக்கம்பக்கத்தினர் வீட்டிலிருந்தவர்களை காப்பாற்றிய பின் காவல்துறையினரிடம் அப்பெண்ணின் கணவர் புகார் செய்தார்.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்தனர். அதன் பிறகு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, 4 பேர் கொண்ட கும்பல் வீட்டில் கொள்ளையடித்ததையும், அக்கும்பலில் இருவர் அப்பெண்ணை பலாத்காரம் செய்ததையும் ஒப்புக்கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரிதா நாயரின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த 28 ஆயிரம் பேரின் செல்போன்கள் கண்காணிப்பு!!
Next post பச்சிளம் பெண் குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய தந்தை கைது!!