வீட்டு உரிமையாளரின் மைனர் மகள்களை கற்பழித்து,சீரழித்த குடித்தனக்காரர் கைது!!

Read Time:2 Minute, 5 Second

0806e391-4171-4d12-a4e2-5ccc4bcfecc0_S_secvpfஉத்தரகாண்ட் மாநிலத்தில் வீட்டு உரிமையாளரின் மைனர் வயது மகள்களை மிரட்டி, கற்பழித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனின் ராஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு புதிதாக வாடகைக்கு குடிவந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர், அந்த வீட்டு உரிமையாளரின் 16 வயது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது, அவளது வாயைப் பொத்தி, மிரட்டி, கற்பழித்தார்.

இதை வெளியே சொன்னால் உன்னையும், உன் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டிய அவர், தொடர்ந்து அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் பயந்துப்போய் இது தொடர்பாக யாரிடமும் மூச்சு விடாமல் இருந்து விட்டாள்.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணின் தங்கையான 11 வயது சிறுமியையும் அவர் கற்பழித்து, சீரழித்தார். ஆனால், அந்தச் சிறுமி, தனது அக்காவைப் போல் அமைதியாக இருந்துவிடாமல் நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் கூறி அழுது, முறையிட்டாள்.

இதனையடுத்து, சிறுமிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இருவரும் கற்பழிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, குற்றவாளியை கைது செய்த போலீசார், அவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியைப் பிரிந்த நடிகர் 2வது திருமணம்!!
Next post ஆண்கள் கைப்பந்து போட்டியைப் பார்க்கச் சென்ற பெண் சிறையில்!!