கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி படுகொலை: மளிகை கடைக்காரர் கைது!!

Read Time:3 Minute, 57 Second

05080642-e545-46f1-ba9e-b2e28deb8a51_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சிறுநாடார் குடியிருப்பு பஞ்சாயத்து அலுவலக தெருவை சேர்ந்தவர் சித்திரை பட்டு (வயது45). உடைமரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு சுயம்பு கனி என்ற மனைவியும், 5 மகன்களும் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு சுயம்புகனி தனது மகன்களுடன் பரமன்குறிச்சி அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள சென்று விட்டார். சித்திரைபட்டு மட்டும் வீட்டில் தனியாக தூங்கினார். மறுநாள் காலையில் சித்திரை பட்டு தனது வீட்டின் முன்பு தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டணம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் சுடலைமுத்து, கந்தப்பன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விபரம் வருமாறு:–

கொலையுண்ட சித்திரைபட்டுவின் மனைவி சுயம்புகனிக்கும் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊர் தலைவர் ஆதிலிங்கம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த சித்திரைபட்டு மனைவியை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் சித்திரை பட்டு மதுபோதையில் ஆதிலிங்கத்தின் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறு செய்துள்ளார். எனது மனைவியுடனான கள்ளத் தொடர்பை விட்டு விடு என கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் சித்திரை பட்டுவை சமாதானம் செய்து அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதைப்பற்றி அறிந்த ஆதிலிங்கத்தின் மகன் பாலகணேஷ் (28) சித்திரை பட்டுவின் வீட்டிற்கு சென்று எனது தந்தையிடம் எப்படி தகராறு செய்யலாம் என கூறி சித்திரை பட்டுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரம் அடைந்த பாலகணேஷ் அருகே கிடந்த மண்வெட்டியால் சித்திரை பட்டுவின் தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். பலத்த வெட்டு காயம் அடைந்த சித்திரைபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக குலசேகரன்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையுண்ட சித்திரை பட்டுவின் மனைவி சுயம்புகனி, கள்ளக்காதலன் ஆதிலிங்கம் ஆகியோரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வெளியூருக்கு தப்பி செல்வதற்காக உடன்குடி பஸ் நிலைய பகுதியில் பதுங்கி இருந்த பாலகணேசை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய மண்வெட்டியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். பாலகணேசுக்கு திருமணமாகவில்லை. அவர் சென்னையில் மளிகை கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆலியாவின் தூக்கத்தை கெடுத்த ஹிருத்திக்!!
Next post சூர்யாவைப் பிரிய நேரிடுமோ? ஜோதிகா அச்சம்!!