ஆண்கள் கைப்பந்து போட்டியைப் பார்க்கச் சென்ற பெண் சிறையில்!!

Read Time:2 Minute, 20 Second

60849423Untitled-1இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் கான்ச்சே கவாமி (25). ஈரான் வம்சாவளியை சேர்ந்த இவர் சட்டதுறை பட்டதாரி ஆவார்.

ஈரானில் கடந்த ஜூன் மாதம் ஈரான்–இத்தாலி அணிகளுக்கு இடையேயான ஆண்கள் கைப்பந்து போட்டி நடந்தது. அந்த போட்டியை பார்க்க அவர் சென்றிருந்தார்.

அந்த குற்றத்துக்காக அவர் விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். மேலும், அவருடன் பெண் நிருபர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் 2 நாளில் விடுதலை செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஈரானில் இஸ்லாமிய சட்டப்படி அரசு நிர்வாகம் நடைபெறுகிறது. அங்கு ஆண்கள் விளையாட்டு போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை உள்ளது.

பெண்கள் மீது ஆண்கள் முறையற்ற வகையில் அத்துமீறி நடப்பதை தவிர்க்கவே இது போன்ற சட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட கவாமி மீது சட்டத்தைமீறி நடந்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து அவருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் கான்ச்சேகவாமி சிறையில் தனது உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கியுள்ளார். சிறையில் உணவு சாப்பிட மறுத்து வருகிறார்.

இந்த தகவலை லண்டனில் உள்ள அவரது சகோதரர் இமான் கவாமி தெரிவித்தார். இதற்கிடையே கவாமி கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஈரானில் உள்ள இங்கிலாந்து வாசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி இணைய தளத்தின் மூலம் 5 இலட்சம் ஆதரவாளர்களை திரட்டுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டு உரிமையாளரின் மைனர் மகள்களை கற்பழித்து,சீரழித்த குடித்தனக்காரர் கைது!!
Next post இலங்கை ஜனாதிபதி, சு.சாமிக்கு எதிராக இலங்கை அகதிகள் போராட்டம்!!