ஆலியாவின் தூக்கத்தை கெடுத்த ஹிருத்திக்!!

Read Time:2 Minute, 44 Second

Untitled-116பல இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்து வருபவர் ஹிருத்திக் ரோஷன். ஏளாரமான பெண் இரசிகைகளின் மனதை கொள்ளை கொண்ட ஹிருத்திக், தனது மனைவி சுசானாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.

இவர்களுக்கு சட்டப்படி விவாகரத்து வழங்குவதாக மும்பை நீதிமன்றமும் கடந்த வாரம் உத்தரவிட்டது. தற்போது ஹிருத்திக் தனியாக இருப்பது பல பெண்களின் தூக்கத்தை கெடுத்துள்ளதாம். அவர்களில் நடிகை ஆலியாபட்டும் ஒருவர்.

சமீபத்தில் ஆலியா பட் அளித்த பேட்டியில், அவரை கிறங்கபடித்த நடிகர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஹிருத்திக் ரோஷன். தற்போது தனியாக உள்ள ஹிருத்திக் ரோஷன் தான் என் தூக்கத்தை கெடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஹிருத்திக் மீதான தனது விருப்பத்தை ஆலியா வெளிப்படையாக கூறி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு முன் காபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா பட், தன்னை மிகவும் கவர்ந்தவர் ரன்பீர் கபூர் எனவும், அவரை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாகவும் கூறினார்.

ரன்பீருடன் ரொமான்ஸ் செய்ய விரும்புவதாக ஆலியா கூறியதை அடுத்து அவர்கள் பற்றிய பல கிசுகிசுக்கள் வந்தது. அவர்கள் தங்கள் காதல் பற்றி அறிவித்து, விரைவில் ஜோடி சேருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அயன் முகர்ஜி இயக்கும் அடுத்த படத்தில் மட்டுமே இவர்கள் ஜோடி சேர உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் தற்போது ஹிருத்திக்குடன் ஜோடி சேர விரும்புவதாக ஆலியா வெளிப்படையாக தெரிவித்துள்ளதால் இது நிஜத்தில் நடக்குமா அல்லது அடுத்த படத்தில் மட்டும் ஹிருத்திக்குடன் ஜோடி சேரும் வாய்ப்பு ஆலியாவிற்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பச்சிளம் பெண் குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய தந்தை கைது!!
Next post கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி படுகொலை: மளிகை கடைக்காரர் கைது!!