சூர்யாவைப் பிரிய நேரிடுமோ? ஜோதிகா அச்சம்!!

Read Time:2 Minute, 15 Second

Untitled-115கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா எட்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கு சூர்யாவும் அனுமதி கொடுத்திருந்த நிலையில் தற்போது ஜோதிகா இந்த படத்தில் நடிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற திரைப்படத்தின் ரீமேக்கில்தான் ஜோதிகா நடிப்பதாக இருந்தது. இந்த படத்தின் கதைப்படி திருமணமாகி ஒற்றுமையாக வாழ்ந்த கணவன் மனைவி திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து போவது போன்ற கதையம்சம் இருப்பதால் ஜோதிகா இந்த படத்தில் நடிக்க செண்டிமெண்டாக தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடித்தபின்னர்தான் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த மஞ்சுவாரியர் – திலீப் ஜோடி திடீரென பிரிந்து விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதுவும் ஜோதிகாவை உறுத்தியுள்ளதால், சூர்யாவுடன் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜோதிகாவுக்கு திடீர் தயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் நடித்தால் தனக்கும் சூர்யாவுக்கும் விவாகரத்து ஆகும் நிலை ஏற்படுமோ என ஜோதிகா அச்சம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தயாரிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டு தனக்கு பதிலாக நயன்தாராவை நடிக்கவைக்க ஜோதிகா ஆலோசனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி படுகொலை: மளிகை கடைக்காரர் கைது!!
Next post மகளை துஷ்பிரயோகம் செய்தவனை விருந்து வைத்துக் கொன்ற தந்தை!!