மனைவியைப் பிரிந்த நடிகர் 2வது திருமணம்!!

Read Time:2 Minute, 21 Second

Untitled-112நடிகர் ரஞ்சித்துக்கு 2–வது திருமணம் நடக்க உள்ளது. நடிகை ராகசுதாவை மணக்கிறார். மறுமலர்ச்சி, பாண்டவர்பூமி, நட்புக்காக, நரசிம்மா, வள்ளுவன் வாசுகி உள்பட பல படங்களில் ரஞ்சித் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ரஞ்சித்துக்கும் நடிகை பிரியாராமனுக்கும் 1999–ல் திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும். இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ரஞ்சித்துக்கும், பிரியாராமனுக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தார்கள்.

ரஞ்சித் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். தற்போது நடிகை ராகசுதாவுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. ராகசுதா ‘தங்கத்தின் தங்கம்’ என்ற படத்தில் ராமராஜன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர்.

தமிழச்சி, ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கையான நடிகை கே.ஆர்.சாவித்திரியின் மகள் ஆவார். ராகசுதா ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்தார். நித்யானந்தா ஆசிரமத்திலும் தொடர்பு வைத்து இருந்தார். ராகசுதாவை திருமணம் செய்து கொள்வதை ரஞ்சித்தும் உறுதிபடுத்தினார்.

அவர் கூறும் போது, ராகசுதாவும் நானும் நட்பாக பழகினோம். அவருடைய ஆன்மீக ஈடுபாடுகளில் நான் ஈர்க்கப்பட்டேன். இவருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுதுள்ளோம். எங்கள் திருமணத்துக்கு வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டனர். வருகின்ற 10–ம் திகதி சென்னையில் எங்கள் திருமணம் நடக்க உள்ளது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் விபச்சாரம் – அறுவர் கைது!!
Next post வீட்டு உரிமையாளரின் மைனர் மகள்களை கற்பழித்து,சீரழித்த குடித்தனக்காரர் கைது!!