மீனவர்கள் தூக்குமேடை செல்ல மோடியே காரணம் – வைகோ ஆவேசம்!!

Read Time:1 Minute, 48 Second

18039146661512806867vaiko2தமிழக மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு நரேந்திர மோடி அரசுதான் காரணம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கூறினார்.

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரியும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க கோரியும், பால் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும் ம.தி.மு.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று போராட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஒழியட்டும், ஒழியட்டும் தூக்குத் தண்டனை ஒழியட்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தமிழகத்தில் பால் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 மீனவர்களின் தூக்குத் தண்டனைக்கு மத்திய அரசே காரணம். மோடி அரசின் தவறான அணுகுமுறையால் மீனவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கொலைகாரனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்த மானங்கெட்ட அரசு இது. கொலைகாரனுக்கு இங்கே ஒருவர் பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்கிறார்” என்று ஆவேசமாக கூறினார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பழங்குடி பெண் தீயிட்டு தற்கொலை முயற்சி!!
Next post சீரற்ற காலநிலையால் புத்தளத்தில் 4221 பேர் பாதிப்பு!!